- ஒலிம்பிக்
- தீரஜ்
- தருண்தீப்
- பிரவீன்
- துருக்கி
- இந்தியா
- சாத்விக்சாய்ராஜ் ரங்கிரிட்டி
- பேட்மிண்டன் இரட்டையர் காலிறுதி
- சிராக்…
- தின மலர்
* ஆண்கள் வில்வித்தை குழு காலிறுதியில் துருக்கியுடன் நேற்று மோதிய இந்திய அணி (தீரஜ், தருண்தீப், பிரவீன்) 2-6 என்ற கணக்கில் போராடி தோற்றது.
* ஆண்கள் பேட்மின்டன் இரட்டையர் பிரிவு காலிறுதியில் விளையாட இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி – சிராக் ஷெட்டி இணை தகுதி பெற்றுள்ளது.
* கெவின் கார்டனுக்கு எதிரான வெற்றி ரத்தான நிலையில், பெல்ஜியம் வீரர் ஜூலியன் கர்ராகியுடன் நேற்று மோதிய இந்திய நட்சத்திரம் லக்ஷியா சென் 21-19, 21-14 என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தினார் (43 நிமிடம்). எல் பிரிவில் தனது கடைசி லீக் ஆட்டத்தில் இந்தோனேசியாவின் ஜொனாதன் கிறிஸ்டியை எதிர்கொள்கிறார்.
* ரமிதா 7வது இடம்
ஒலிம்பிக் மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியின் பைனலில் நேற்று களமிறங்கிய இந்திய வீராங்கனை ரமிதா ஜிண்டால் (20 வயது) மொத்தம் 145.3 புள்ளிகளுடன் 7வது இடம் பிடித்தார். இதனால் இந்தியாவின் பதக்க நம்பிக்கை தகர்ந்தது.
* அர்ஜூன் 4வது இடம்
ஒலிம்பிக் ஆண்கள் துப்பாக்கிச்சுடுதல் 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியின் பைனலில் நேற்று களமிறங்கிய இந்திய வீரர் அர்ஜூன் பபுதா முதல் 3 சுற்றுகளில் பதக்க வாய்ப்பில் நீடித்தார். ஆனால், அடுத்தடுத்த சுற்றுகளில் பின்தங்கியவர், துரதிர்ஷ்டவசமாக கடைசியில் 4வது இடமே பிடிக்க முடிந்தது. அவர் மொத்தம் 208.4 புள்ளிகளை பெற்றார்.
இப்போட்டியில் சீனாவின் லிஹோ செங் (252.4 புள்ளி), சுவீடனின் விக்டர் லிண்ட்கிரின் (251.4), குரோஷியாவின் மிரன் மாரிசிச் (230) முறையே தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்றனர்.
* போரால் நடுநிலை
உக்ரைன் மீது போர் தொடுத்திருப்பதால் ரஷ்யா ஒலிம்பிக்கில் பங்கேற்க அனுமதியில்லை. இந்த போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக இருப்பதால் பெலாரசுக்கும் வாய்ப்பில்லை. ஆனால் இந்த இரு நாட்டின் வீரர்கள் நடுநிலை வீரர்களாக ஒலிம்பிக் கொடியுடன் இப்போட்டியில் பங்கேற்றுள்ளனர். இந்த நாடுகளில் இருந்து டென்னிஸ் உள்ளிட்ட தனிநபர் விளையாட்டுகளில் 31 பேர் கலந்துகொண்டுள்ளனர். ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் இந்த நாடுகள் பங்கேற்க முடியாததால் எப்போதும் இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த எண்ணிக்கையில் இந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் களமிறங்கி உள்ளனர். அதே போல் மற்ற நாடுகளில் அகதிகளாக வாழ்ந்து வரும் வீரர்களும், வீராங்கனைகளும் ஒலிம்பிக் அகதிகள் அணியாக (37 பேர்) பாரிஸ் ஒலிம்பிக்கில் விளையாடுகின்றனர்.
The post ஒலிம்பிக் துளிகள்… appeared first on Dinakaran.