×
Saravana Stores

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர் மழை கலெக்டர் நேரில் ஆய்வு

கரூர், ஜூலை 29: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர் மழை காரணமாக அமராவதி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. ஆண்டான்கோயில் தடுப்பணையில் ஒரே நாளில் 1883 கன அடி தண்ணீர் உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கன மழை காரணமாக திருப்பூர் மாவட்டம் உடுமைப்பேட்டை அமராவதி அணைக்கு நீர் வரத்து அதிகரிக்க தொடங்கியது. அணை முழுக் கொள்ளளவை எட்ட உள்ளதால் அணைக்கு வரும் உபரி நீர் முழுவதுமாக அமராவதி ஆற்றில் கடந்த 19ம் தேதி முதல் திறக்கப்பட்டது. அந்த தண்ணீர் கடந்த 21ம் தேதி கரூர் நகரை கடந்து திருமுக்கூடலூரில் காவிரி ஆற்றில் கலந்து சென்றது.

கரூர் மாநகராட்சியை ஒட்டிய ஆண்டான்கோயில் தடுப்பணைக்கு கடந்த 21ம் தேதி 2184 கன அடி தண்ணீர் வந்த நிலையில் படிப்படியாக குறைய துவங்கியது. நேற்று காலை 306 கன அடி தண்ணீர் வந்த நிலையில் படிப்படியாக அதிகரித்து நேற்று காலை 6.30 மணி நிலவரப்படி விநாடிக்கு 2189 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது.

அந்த தண்ணீர் கரூர் நகரை கடந்து திருமுக்கூடலூரில் காவிரி ஆற்றில் கலந்து மாயனூர் கதவணையை கடந்து காவிரி ஆற்றில் டெல்டா மாவட்டத்தை நோக்கி செல்கிறது. மாயனூர் கதவணைக்கு நேற்று காலை 6 மணி நிலவரப்படி விநாடிக்கு 1162 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அவை முழுவதுமாக காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. அமராவதி அணையிலிருந்து திறக்கப்பட்ட அளவை எட்டிவிடும் என நீர்வள துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர் மழை கலெக்டர் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : KARUR ,AMRAVATI ,WESTERN CONTINUUM MOUNTAINS ,Antankoil Dam ,Western ,Dinakaran ,
× RELATED காந்தி கிராமம் அருகே வடிகால்களை சிலாப் கொண்டு மூட வேண்டும்: