×
Saravana Stores

2வது ஆடி வெள்ளியை முன்னிட்டு நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

 

கரூர், ஜூலை 27: இந்தாண்டின் 2வது ஆடி வெள்ளியை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய அம்மன் கோயில்களில நேற்று நூற்றுக்கணக்கான பக்தர்கள் சென்று சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் வரும் அனைத்து வெள்ளிக்கிழமை நாட்களிலும் பொதுமக்கள், மாரியம்மன், காளியம்மன் போன்ற கோயில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.அந்த வகையில் இந்தாண்டின் இரண்டாவது ஆடி வெள்ளி நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு நேற்று காலை முதல் மாலை வரை கரூர் மாரியம்மன், வேம்புமாரியம்மன் கோயில், தாந்தோணிமலை ஊரணி காளியம்மன், முத்துமாரியம்மன், பகவதியம்மன் கோயில் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அம்மன் கோயில்களுக்கு அதிகளவு பக்தர்கள் சென்று சுவாமி தரிசனம் மேற்கொண்டு சென்றனர்.

ஜூலை மாதத்தில் 2 ஆடி வெள்ளிக்கிழமையும், ஆகஸ்ட் மாதத்தில் 3 ஆடி வெள்ளிக்கிழமைகளும் வரவுள்ளன. இந்த ஐந்து வெள்ளிக்கிழமைகளிலும் அனைத்து அம்மன் கோயில்களிலும் சுவாமி தரிசனம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.நேற்று இரண்டாவது ஆடி வெள்ளி என்பதால் அதிகளவு பக்தர்கள் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post 2வது ஆடி வெள்ளியை முன்னிட்டு நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Tags : 2nd ,Adi Villi ,Karur ,Amman ,Karur district ,Swami ,2nd Aadi ,Aadi ,Mariamman ,Dinakaran ,
× RELATED ஆடி வெள்ளி திருவிழாவில் ₹13.51 லட்சம்...