×

ஸ்மார்ட் மொபிலிட்டி பாடத்திட்டம் உருவாக்க விஐடி-வால்வோ இந்தியா புரிந்துணர்வு ஒப்பந்தம்: வேந்தர் கோ.விசுவநாதன் முன்னிலையில் கையெழுத்து

சென்னை: வால்வோ குரூப் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மூலமாக ஸ்மார்ட் மொபிலிட்டி (எம்.டெக்) பாடத்திட்டம் உருவாக்க விஐடியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலமாக வால்வோ நிறுவனம், பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு வழங்க விஐடி மாணவர்களுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ஸ்மார்ட் மொபிலிட்டி, பாடத்திட்டம் தயாரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கும்.
மேலும், வால்வோ குரூப் இந்தியா சி.எஸ்.ஆர் அறக்கட்டளை, விஐடியில் பி.டெக் பயிலும் 5 மாணவிகளுக்கு (2024-28 பேட்ச்), 4 ஆண்டுகளுக்கு கல்வி கட்டணத்தின் முழு செலவையும் ஏற்கும். பி.டெக் – இயந்திர பொறியியல், பி.டெக். இயந்திர பொறியியல் (எலக்ட்ரிக் வாகனங்கள்) அல்லது பி.டெக். இயந்திர பொறியியல் (உற்பத்தி பொறியியல்) பாடங்கள் பயிலலாம்.

இதற்காக, விஐடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விஐடி நிறுவனர் மற்றும் வேந்தர் டாக்டர் கோ.விசுவநாதன், வால்வோ குரூப் இந்தியாவின் சி.எஸ்.ஆர் இயக்குனர் ஜி.வி.ராவ், விஐடி துணை தலைவர்கள் சங்கர் விசுவநாதன், டாக்டர் ஜி.வி.செல்வம், துணைவேந்தர் டாக்டர் வி.எஸ்.காஞ்சனா பாஸ்கரன், இணை துணை வேந்தர் டாக்டர் பார்த்தசாரதி மல்லிக், பதிவாளர் டாக்டர் ஜெயபாரதி, வால்வோ மனித வள மேம்பாட்டு துறை தலைவர் டாக்டர் டி.பி. ரஞ்சித், பிரபு கிருஷ்ணன், வால்வோ மனித வள மேம்பாட்டு துறை துணை மேலாளர் ஆகியோர் முன்னிலையில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு ஒப்பந்தத்தை பரிமாறிக்கொண்டனர்.

The post ஸ்மார்ட் மொபிலிட்டி பாடத்திட்டம் உருவாக்க விஐடி-வால்வோ இந்தியா புரிந்துணர்வு ஒப்பந்தம்: வேந்தர் கோ.விசுவநாதன் முன்னிலையில் கையெழுத்து appeared first on Dinakaran.

Tags : VIT ,Volvo India ,Vender Go.Viswanathan. ,CHENNAI ,Volvo Group India Pvt. ,Volvo Company ,Vender ,Gov. ,Viswanathan ,Dinakaran ,
× RELATED வேலூர் விஐடியில் கலைஞர் நூற்றாண்டு...