பெங்களூரு: மாநிலத்தில் பஞ்சாயத்து ராஜ் துறையில் சில தொழில்நுட்ப வசதிகள் மேற்கொள்வதால் இ-சொத்து தொழில்நுட்ப வசதி இன்று தொடங்கி மூன்று நாட்கள் செயல்படாது என்று பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் பிரியாங்க் கார்கே தெரிவித்தார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘மாநில ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையை முழுமையாக தொழில்நுட்ப வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன் காகித வடிவில் இருந்து பொதுமக்களின் சொத்து விவரங்கள் அனைத்தும் கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதற்காக இ-சொத்து தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் லட்சக்கணக்கான பயனாளிகள் பலனடைந்து வருகிறார்கள். இந்நிலையில் இ-சொத்து போர்டல் வசதியை வரும் ஆகஸ்ட் 2ம் தேதி முதல் தினமும் இரவு 8 மணி வரை நீட்டிக்கப்படுகிறது. இதற்காக திஷாங்க் செயலில் சில தொழில்நுட்ப பணிகள் மேற்கொள்வதால் முதல் (இன்று) வரும் 29ம் தேதி வரை மூன்று நாட்கள் இ-சொத்து போர்டல் இயங்காது. பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்’ என்றார்.
The post இன்று முதல் மூன்று நாட்கள் இ-சொத்து வசதி முடக்கம் appeared first on Dinakaran.