×

மாவட்டத்திற்குட்பட்ட 10 பணிமனைகளுக்கும் ஒரே நாளில் 23 புதிய பஸ்கள் இயக்கம்

*கும்பகோணத்தில் அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்

கும்பகோணம் : கும்பகோணம் புதிய பஸ் நிலையத்தில் புதிய பஸ்கள் மற்றும் புதிய கூண்டு கட்டமைக்கப்பட்ட பஸ்கள் துவக்க விழா நேற்று காலை நடைபெற்றது. போக்குவரத்து துறை அமைச்சர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் (கும்பகோணம்) லிமிடெட், கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு 10 பணிமனைகள் மூலம் 481 பஸ்களை இயக்கி தஞ்சாவூர் மாவட்ட பொதுமக்களுக்கு சேவை செய்து வருகிறது.

இதில் கும்பகோணம் புறநகர், கும்பகோணம் நகர்-1, கும்பகோணம் நகர்-2, திருவையாறு, தஞ்சாவூர் புறநகர், தஞ்சாவூர் நகர்-1, தஞ்சாவூர் நகர்-2, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி என 10 பணிமனைகளை உள்ளடக்கிய தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளொன்றுக்கு 250 புறநகர் பஸ்கள், 194 நகர் பஸ்கள் மூலம் 2,08,341 கி.மீ இயக்கப்பட்டு, 3,86,629 பயணிகள் பயனடைந்து வருகின்றனர்.

மேலும் தமிழ்நாடு முதல்வரின் கனவு திட்டமான விடியல் பயணத்தின் மூலம் மகளிர், மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளிகளின் உதவியாளர்கள் மற்றும் திருநங்கைகள் என 1.51 லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர். மேலும் 1.18 லட்சம் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கட்டணமில்லா பயணம் செய்து பயன்பெறுகின்றனர்.இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்திற்குட்பட்ட 10 பணிமனைகளுக்கும் புதிய மற்றும் கூண்டு புனரமைக்கப்பட்ட (கட்டமைக்கப்பட்ட) 88 பஸ்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, இதுநாள் வரை 54 பஸ்கள் இயக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது நேற்று 25ம் தேதி வியாழக்கிழமை தஞ்சாவூர் மாவட்டத்தில் 23 பஸ்கள் இயக்கப்பட்டது.

அதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் பொதுமக்கள் நலன் கருதி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கும்பகோணம் லிமிடெட்) கும்பகோணம் மண்டலத்திற்கு 15 புதிய பஸ்கள் மற்றும் 08 புதிய கூண்டு கட்டமைக்கப்பட்ட பஸ்கள் துவக்க விழா கும்பகோணம் புதிய பஸ் நிலையத்தில் நேற்று காலை நடைபெற்றது.

விழாவில் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தார். எம்எல்ஏக்கள் சாக்கோட்டை அன்பழகன் (கும்பகோணம்), டி.கே.ஜி.நீலமேகம் (தஞ்சாவூர்), மாநகராட்சி மேயர்கள் சரவணன் (கும்பகோணம்), சண்.ராமநாதன் (தஞ்சாவூர்), துணை மேயர் சு.ப.தமிழழகன், தஞ்சாவூர் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, துணைத்தலைவர் முத்துச்செல்வம் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) மேலாண் இயக்குனர் மகேந்திரகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் மற்றும் தமிழ்நாடு அரசு தலைமை கொறடா கோ.வி.செழியன் ஆகியோர் பங்கேற்று பஸ்களை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

இந்த விழாவில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செ.ராமலிங்கம், குட்டி தட்சிணாமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் உள்ளூர் கணேசன், கும்பகோணம் மாநகர துணை செயலாளர்கள் பிரியம் சசிதரன், சிவானந்தம், கிழக்கு ஒன்றிய செயலாளர் சுதாகர், மாவட்ட சார்பணி அமைப்பாளர்கள் அனந்தராமன், முருகன், சிவக்குமார், கும்பகோணம் மாநகராட்சி ஆணையர் லட்சுமணன், கும்பகோணம் ஆர்டிஓ பூர்ணிமா, வட்டாட்சியர் சண்முகம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கும்பகோணம்) பொது மேலாளர்கள் முகமது நாசர், ராஜசேகர், துணை மேலாளர் (வணிகம்) சதீஷ்குமார், முதன்மை தணிக்கை அலுவலர் சிவக்குமார், துணை மேலாளர்கள் மலர்வண்ணன், ராஜேந்திரன், செந்தில்குமார், தமிழ்ச்செல்வன், தர், உதவி மேலாளர்கள் ராஜேஷ், ராஜசேகர், அரசு அதிகாரிகள், போக்குவரத்து அலுவலர்கள், மாமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

The post மாவட்டத்திற்குட்பட்ட 10 பணிமனைகளுக்கும் ஒரே நாளில் 23 புதிய பஸ்கள் இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Minister ,Sivashankar ,Kumbakonam Kumbakonam ,Kumbakonam New Bus Station ,Transport Minister ,Thanjavur ,Dinakaran ,
× RELATED ஆட்சியில் இருந்த போது நீட்டை ஆதரித்து...