×

மணம் தரும் நெய் மிளகாய் பயிரிட நீலகிரி விவசாயிகள் அதிக ஆர்வம்

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் மணம் தரும் நெய் மிளகாய் விவசாயத்தில் தற்போது விவசாயிகள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். மித வெப்பம் பகுதிகளான குன்னூர், ஏற்காடு, மூணாறு, கூடலூர் மற்றும் கொடைகானல் போன்ற பகுதிளில் தற்போது ஒரு வித மனம் தரும் நெய் மிளகாய் எனப்படும் மூட்டை மிளகாய் தற்போது அதிகளவு விவசாயம் செய்து வருகின்றனர். இந்த மிளகாய் அதிகளவு இலங்கையில் விளைவிக்கப்படுகிறது.

தமிழகத்தில் இருந்து கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை சென்ற தமிழகர்கள், மீண்டும் தாயகம் திரும்பும் போது இந்த மிளகாய் விதைகளை கொண்டு வந்தனர். இதனால், இவர்கள் வாழும் பகுதிகளில் இந்த மிளகாய் அதிகளவு பயிரிடப்படுகிறது. துவக்கத்தில் தங்களது தேவைகளுக்கு மட்டுமே பயிரிட்டு வந்தனர். ஆனால், தற்போது விற்பனைக்காகவும் பயிரிட்டு வருகின்றனர்.

குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், கூடலூர் பகுதிகளில் அதிகளவு பயிரிடப்படுகிறது. இந்த மிளகாய் கொண்டு சமைக்கும் உணவுகள் ஒரு வித மனம் தருகிறது. இந்த மனம் நெய்யின் சுவை மற்றும் மனத்தை கொண்டுள்ளதாலேயே இதற்கு நெய் மிளகாய் என்ற பெயர் வந்தது. அடர் சிவப்பு மற்றும் பச்சை நிறத்தில் காணப்படும் இந்த மிளகாயை தற்போது பலரும் பயன்படுத்த துவங்கியுள்ள நிலையில், இதற்கு மார்க்கெட்டில் கிராக்கி அதிகரித்துள்ளது.

இந்த மிளகாய் மழை காலமான ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை அதிக மகசூல் தரும். கோடையில் மகசூல் குறைந்து காணப்படும். மேலும், உடல் வெப்பத்தை சீராக வைத்துக் கொள்ளவும், புற்று நோய் வராமல் தடுக்கும் குணம் உள்ளது எனக் கூறப்படுவதால் தற்போது மக்கள் இதனை வாங்கி உணவில் சேர்த்து கொள்கின்றனர். தற்போது இந்த மிளகாய்க்கு மார்க்கெட்டில் அதிக விலை கிடைப்பதால், இதனை பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

The post மணம் தரும் நெய் மிளகாய் பயிரிட நீலகிரி விவசாயிகள் அதிக ஆர்வம் appeared first on Dinakaran.

Tags : Nilgiris ,Coonoor ,Yercaud ,Munnar ,Kudalur ,Kodaikanal ,
× RELATED குன்னூர் அருகே குடியிருப்பு...