×

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கணினி மயமாக்கல் பணியை மண்டல அலுவலர் நேரில் ஆய்வு

 

பெரம்பலூர், ஜூலை 26: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கணினி மயமாக்கல் பணிகள் நடைபெற்று வருவதை மண்டல அலுவலர் கூடுதல் பதிவாளர் நீதி மற்றும் வங்கியியல் மா.சுப்பிரமணியன் பெரம்பலூர் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தில் கூட்டுறவு சங்க செயலாளருடன் ஆய்வு நடத்தினார். தொடர்ந்து பெரம்பலூர் மண்டல இணைப்பதிவாளர் கூட்ட அரங்கில் நடைபெறும் கணினி மயமாக்கல் பணிகளை பார்வையிட்டார். பின்னர் மருவத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை ஆய்வு செய்தார்.

சிறுகுடல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் டிராக்டர் மற்றும் உழவு பணி இயந்திரங்களை பார்வையிட்டார். ஆய்வின் போது பெரம்பலூர் மண்டல இணை பதிவாளர் பாண்டியன், திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனர் அரசு, பெரம்பலூர் சரக துணை பதிவாளர் இளஞ்செல்வி, பெரம்பலூர் பொது விநியோகத்திட்ட துணைப்பதிவாளர் சிவகுமார், திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கடன் பிரிவு மேலாளர் பெரியசாமி, பெரம்பலூர் மண்டல இணை பதிவாளர் அலுவலக ஆ பிரிவு கண்காணிப்பாளர் ரமேஷ், திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கடன் பிரிவு உதவியாளர் சரவணன் ஆகியோர் உள்ளனர்.

The post தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கணினி மயமாக்கல் பணியை மண்டல அலுவலர் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Primary Agriculture Cooperative Credit Union ,Perambalur ,Zonal ,Subramanian ,Dinakaran ,
× RELATED குறைதீர் கூட்டத்தில் மனு கொடுக்க அரை நிர்வாணத்துடன் வந்த ஊராட்சி தலைவர்