அரியலூர், ஜூலை 26: கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் (நிதி மற்றும் வங்கியியல்) அரியலூர் மண்டலத்தில் செயல்படும் கூட்டுறவு சங்கங்களில் கணினி மயமாக்குதல் தொடர்பான பணிகளை மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார் மேலும் அரியலூர் மாவட்டத்தில் உள்ள கோடாலி கருப்பூர் அணை குடம் மற்றும் தா.பழுர் கூட்டுறவு சங்கங்களில் கணினி மயமாக்கல் பணி மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் (PACCS AS MSC )திட்டத்தின் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட வேளாண் கருவிகளை ஆய்வு செய்து அறிவுரைகள் வழங்கினார்.
மேலும் அணைக்குடம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கினார்கள் இந்த நிகழ்வில் அரியலூர் மண்டல இணைப்பதிவாளர், திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனர் ,சங்கத்தின் செயலாட்சியர்கள், திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.
The post கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் ஆய்வு appeared first on Dinakaran.