ஓசூர், ஜூலை 26: ஓசூர் மாநகராட்சி வார்டு எண்-24, ராம் நகரில் 6ஆழ்துளை கிணறுகள் மூலம் மார்ச் மாதம் வரை தினமும் குடிநீர் வழங்கப்பட்டது. கடந்த வருடம் பருவமழை பொய்த்த காரணத்தால், 3 ஆழ்துளை கிணறுகளில் நீர் வற்றியது. இதனால் குடிநீர் வழங்குவதில் சிரமம் ஏற்பட்டது. இருந்தாலும் 3 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், ஒரு ஆழ்துளை கிணற்றில் நீர் மூழ்கி மோட்டார் சேதாரம் அடைந்ததையொட்டி, இந்த ஆழ்துளை கிணற்றிலிருந்து குடிநீர் வழக்கமாக விநியோகம் செய்யும் பகுதிகளுக்கு வழங்க இயலவில்லை. தற்போது பழுதான மோட்டார் சரி செய்யப்பட்டு, ஆழ்துளை கிணற்றின் மூலம் குடிநீர் எடுக்கப்படுகிறது. மேலும் இப்பகுதியில் பழுதான குழாய்களை மாற்றப்பட்டு, பிரச்னைக்குரிய பகுதிகளில் 2 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இத்தகவலை ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் (பொ) டிட்டோ தெரிவித்துள்ளார்.
The post ஓசூர் ராம்நகரில் சீரான முறையில் குடிநீர் விநியோகம் appeared first on Dinakaran.