தேவையான பொருட்கள்
மீடியமான முழு மீன் – இரண்டு
பூண்டு பொடி – ஒரு தேக்கரண்டி
காஷ்மீரி சில்லி பொடி – ஒரு தேகக்ரண்டி
மிளகு தூள் – ஒரு தேக்கரண்டி
உப்பு தூள் – ஒன்னறை தேக்கரண்டி(தேவைக்கு)
எலுமிச்சை சாறு – முன்று மேசை கரண்டி
பப்பரிக்கா பவுடர் – அரை தேக்கரண்டி
வினிகர் – ஒரு தேக்கரண்டி
உருளை கிழங்கு – இரண்டு
வெங்காயம் – ஒன்று
செய்முறை
மீனை சுத்தம் செய்து இடை இடையே நன்கு ஆழமாக கீறி விடவும். மேலே குறிப்பிட்ட அனைத்து மசாலாக் களையும் மீனில் நன்கு பிரட்டி முன்று மணி நேரம் ஊற வைக்கவும். 200 டிகிரியில் முற்சூடு செய்யபட்ட அவனில் 35 நிமிடம் பேக் செய்யவும். முதலில் உருளை கிழங்கை வட்ட வடிவமாக கட்செய்து டிரேயின் அடியில் வைத்து அதன் மேல் மீனை வைத்து மேலே வெங்காயத்தை வட்ட வடிவமாக கட்செய்து வைக்கவும். இது பேக் செய்யும் போது தண்ணீர் கீழே நிற்கும்.அதற்கு முதலில் மேல் தீயில் 15 நிமிடம் வைக்கவும்.அடுத்து மேலும் கீழும் உள்ள தீயை செலக்ட் செய்து 10 நிமிடம் வைக்கவும். கடைசியாக அடியில் டிரேயில் வைத்து பத்து நிமிடம் வைக்கவும்.குபூஸுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.இதில் உள்ள குபூஸ் வீட்டில் என் கை பக்குவதில் செய்தது. முன்பு அடிக்கடி செய்வேன்.இப்ப ஓவன் ரிப்பேர் ஆனதில் இருந்து செய்வதில்லை, எல்லாம் வீட்டு கிட்டேயே நிறைய க்டைகள் வந்து விட்டது, ஆகையால் அவ்வளவா செய்வதில்லை.
The post கிரில் ஃபிஷ் appeared first on Dinakaran.