×
Saravana Stores

முல்லை பெரியாறு அருகே புதிய அணை கட்ட திட்டமில்லை

டெல்லி: முல்லை பெரியாறு அணையின் அருகே புதிய அணை கட்டும் திட்டம் எதுவும் ஒன்றிய அரசிடம் இல்லை என மக்களவையில் திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் எழுப்பிய கேள்விக்கு, ஒன்றிய ஜல் சக்தி துறை இணை அமைச்சர் ராஜ் பூஷன் சவுத்ரி பதிலளித்தார். அணைகளின் பாதுகாப்பு என்பது அணையின் உரிமையாளர்களான மாநில அரசுகளின் வசமே உள்ளது. அணையின் உரிமையாளரான தமிழக அரசின் நீர்வளத்துறை ஒவ்வொரு ஆண்டும் ஆய்வுப் பணிகளை மேற்கொள்கிறது. அணையின் ஒட்டுமொத்த நிலை மற்றும் கட்டமைப்பு திருப்திகரமாக உள்ளதாக ஒன்றிய குழு தெரிவித்துள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை தற்போதைய நிலையில் 152 அடியாக உயர்த்த முடியாது என்று கூறினார்.

The post முல்லை பெரியாறு அருகே புதிய அணை கட்ட திட்டமில்லை appeared first on Dinakaran.

Tags : Mullai Periyar ,Delhi ,Union Minister of State ,Water Power ,Raj Bhushan Chowdhury ,DMK ,Tamilachi Thangapandian ,Lok Sabha ,Union government ,Dinakaran ,
× RELATED உத்தமபாளையம் தாலுகாவில் தோட்டக்கலை பண்ணை கிளை அமையுமா?