×
Saravana Stores

சென்னை ஐகோர்ட் வளாகத்தில் நாய்கள் தொல்லையா? தூய்மையாக பராமரிக்கப்படுகிறதா? : பொறுப்பு தலைமை நீதிபதி கேள்வி

சென்னை : சென்னை உயர்நீதிமன்ற வளாகம் தூய்மையாக பராமரிக்கப்படுகிறதா? என்று பொறுப்பு தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். 2017ம் ஆண்டு ராஜ்குமார் எனபவர் ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், சென்னை உயர்நீதிமன்ற வளாகம் குப்பை, கூளமாக காட்சி அளிப்பதாகவும் திட, திரவ கழிவுகளை முறையாக கையாண்டு, வளாகத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கு நீண்ட காலமாக தள்ளிவைக்கப்பட்டு வந்த நிலையில், இன்று பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார், நீதிபதி குமரேஷ்பாபு ஆகியோர் அடங்கிய அமர்வு அதன் மீது விசாரணை நடத்தியது. இந்த வழக்கு தொடர்பாக 2021ம் ஆண்டு தமிழக அரசு தரப்பில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையிலும் சென்னை ஐகோர்ட் வளாகம் தூய்மையாக பராமரிக்கப்படுவதில்லை என்றே கூறப்பட்டிருந்தது.

மேலும் இன்றைய வழக்கு விசாரணையின் போது மனுதாரர் தரப்பில், “ஐகோர்ட் வளாகத்திற்குள் 35க்கும் மேற்பட்ட நாய்கள் நடமாட்டம் உள்ளது. மேலும் வளாகம் குப்பை, கூளமாக காட்சி அளிக்கிறது, “இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், “சென்னை உயர்நீதிமன்ற வளாகம் தூய்மையாக 32 பராமரிக்கப்படுகிறதா ?. உயர் நீதிமன்ற வளாகத்தை தூய்மையாக வைக்க சென்னை மாநகராட்சி போதிய ஒத்துழைப்பு அளிக்கிறதா?. வழக்கு தொடர்பாக நிலை அறிக்கையை நாளைக்குள் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற தலைமை பதிவாளருக்கு உத்தரவிடுகிறோம்,”இவ்வாறு தெரிவித்து வழக்கை 31ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

The post சென்னை ஐகோர்ட் வளாகத்தில் நாய்கள் தொல்லையா? தூய்மையாக பராமரிக்கப்படுகிறதா? : பொறுப்பு தலைமை நீதிபதி கேள்வி appeared first on Dinakaran.

Tags : Chennai ICourt ,Chennai ,Chennai High Court Complex ,Rajkumar ,Energy Court ,Dinakaran ,
× RELATED பிசாசு-2 படத்தை வெளியிட இடைக்கால தடை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு