- ஒழுங்குமுறை விற்பனை கூடம்
- கும்பகோணம்
- கும்பகோணம் ஒழுங்குமுறை கூடம்
- தஞ்சாவூர் விற்பனைக் குழு
- பிரியமாலினி
- கண்காணிப்பாளரை
- பிரசாத்
- தின மலர்
கும்பகோணம், ஜூலை 25: கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் விடப்பட்டது.தஞ்சாவூர் விற்பனைக்குழு, கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி ஏலம் விடப்பட்டது. விற்பனைக்கூட கண்காணிப்பாளர் பிரியமாலினி தலைமை வகித்தார். மேற்பார்வையாளர் பிரசாத் முன்னிலை வகித்தார். இதில் கும்பகோணம் சுற்றி உள்ள கிராமத்தில் இருந்து மொத்தம் 2,516 லாட் பருத்தி கொண்டுவரப்பட்டது. விவசாயிகள் 3,352 குவிண்டால் பருத்தி எடுத்து வந்தனர். கும்பகோணம், செம்பனார்கோவில், பண்ரூட்டி, விழுப்புரம், மகுடஞ்சாவடி, தேனி, விருதுநகர், கொங்கணாபுரம், தெலுங்கானா ஆகிய பகுதிகளை சார்ந்த 11 வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர். ஏலம் விடப்பட்ட பருத்தியின் மதிப்பு ரூ.2.30 கோடி.இதில் தனியார் வியாபாரிகளின் அதிகபட்சமாககுவிண்டாலுக்கு ரூ.7,139, குறைந்தபட்ச விலையாக குவிண்டாலுக்கு ரூ.6,519, சராசரி மதிப்பு குவிண்டாலுக்கு ரூ.6,989க்கு கொள்முதல் செய்யப்பட்டது.
The post ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் appeared first on Dinakaran.