- சங்காதர சதுர்த்தி விழா
- கந்தர்வகோட் ராஜகணபதி கோவில்
- Gandharvakottai
- இறைவன்
- விநாயகா
- சங்காதர சதுர்த்தி
- ராஜகணபதி கோவில்
- ராஜகணபதி கோவில்
- பெரிய கடைவீதி, கந்தர்வகோட்டை மாவட்டம்
கந்தர்வகோட்டை, ஜூலை 25: கந்தர்வகோட்டை ராஜகணபதி கோயிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பெரிய கடைவீதியில் உள்ள ராஜ கணபதி ஆலயத்தில் சங்கடஹர சதுர்த்தி விழா நடைபெற்றது. ஆலயத்தில் குடிகொண்டு இருக்கும் ராஜ கணபதிக்கு முதலில் எண்ணை காப்பு செய்து தூய நீரால் நீராட்டி திரவியத்தூள், மஞ்சள் தூள், சந்தனம், சர்க்கரை, பச்சரிசி மாவு, தேன், இளநீர், பால்,தயிர், நெய், பன்னீர், போன்ற 18 வகை அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாந்தி வண்ணமிகு வாசனை மலர்களாலும் அருகம் புல் மாலை அணிந்து சிறந்த முறையில் அலங்கார செய்யப்பட்டு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பிரசாதம் வழங்கப்பட்டது.
The post கந்தர்வகோட்டை ராஜ கணபதி ஆலயத்தில் சங்கடஹர சதுர்த்தி விழா appeared first on Dinakaran.