×

டெங்கு கொசுக்கள் உற்பத்திக்கு காரணமாக இருந்தால் ₹1 லட்சம் அபராதம் விதிப்பு

திருச்செங்கோடு, ஜூலை 25: திருச்செங்கோடு நகராட்சி கமிஷனர் சேகர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: திருச்செங்கோடு நகர் பகுதியில் உள்ள வணிக நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், தனியார் மருத்துவமனை வளாகங்கள், தங்கும் விடுதிகள், ஓட்டல்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றின் சுற்றுப்புறங்களில் டெங்கு பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில், தேவையற்ற பொருட்களை போட்டு வைத்திருந்தாலோ அல்லது கொசு உற்பத்தி ஆவதற்கு காரணமாக இருந்தாலோ, கொசு உற்பத்தி இடங்கள் ஆய்வு அலுவலர்களால் கண்டறியப்பட்டால், சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் உரிமையாளருக்கு ₹1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். நாமக்கல் மாவட்ட பொது சுகாதாரம் துறை மற்றும் திருச்செங்கோடு நகராட்சி சுகாதார பிரிவு அலுவலர்கள் தொடர் கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்கள் தங்கள் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post டெங்கு கொசுக்கள் உற்பத்திக்கு காரணமாக இருந்தால் ₹1 லட்சம் அபராதம் விதிப்பு appeared first on Dinakaran.

Tags : Tiruchengode ,Municipal Commissioner ,Shekhar ,Dinakaran ,
× RELATED தொழில் நிறுவனங்கள் உரிமம் பெற்று செயல்பட வேண்டும்