×

வீட்டு பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

சேலம், செப்.5: சேலம் கருப்பூர் அருகேயுள்ள கோட்டகவுண்டம்பட்டி ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் புவனேஸ்வரி (44). இவர் கடந்த 22ம் தேதி வீட்டை பூட்டி விட்டு, அருகில் உள்ள பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் பீரோ திறந்து கிடந்தது. அங்கிருந்த 2 பவுன் நகை, ₹5 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து கருப்பூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வீட்டு பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Salem ,Bhubaneswari ,Adi Dravidar Colony ,Kotakoundambatti ,Salem Karuppur ,
× RELATED குழந்தையுடன் பெண் மாயம்