×

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் கிளாம்பாக்கம் ரயில் நிறுத்தம் நடைமுறைக்கு வந்து விடும்: தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் பேட்டி

டெல்லி: ரயில்வே துறைக்காக ரூ. 2,65200 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநில வாரியாக எவ்வளவு தொகை ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் செய்தியாளர்களை சந்தித்தார். இதைத்தொடர்ந்து தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து தமிழகத்திற்கு ரயில்வே பட்ஜெட் மூலம் கிடைக்கும் திட்டங்கள் குறித்து விளக்கினார். அப்போது பேசிய ஆர்.என்.சிங், “தமிழ்நாட்டுக்கு காங்கிரஸ் ஆட்சியில் ரயில்வேக்கு 879 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால் மோடி ஆட்சியில் 6, 362 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 77 ரயில் நிலையங்கள் அது நவீனமாக மாற்றப்பட உள்ளது. இந்த ஆண்டு விமான நிலையத்திற்கு இணையாக 77 ரயில் நிலையங்கள் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை, சென்னை எழும்பூர், சென்னை பூங்கா, செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, கிண்டி, பரங்கிமலை உள்ளிட்ட 77 ரயில் நிலையங்கள் அம்ரித் ரயில் நிலையங்கள் என்ற திட்டத்தின் கீழ் மேம்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும் 4-வது முனையமான வில்லிவாக்கம் என்பதனை பெரம்பூருக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக பெரம்பூர் முதல் அம்பத்தூர் வரை லைன் போடும் பணி தொடங்கப்பட உள்ளது. இதற்காக ஆய்வு பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.

மேலும் விரிவான திட்ட அறிக்கைகள் தயார் செய்து மத்திய ரயில்வே துறைக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த திட்ட அறிக்கை இந்தாண்டு அக்டோபரில் அனுப்ப பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. தமிழகத்திற்கு புதிதாக 40 ரயில்வே மேம்பாலங்கள் கட்டப்பட உள்ளது. அதற்காக தமிழக அரசு நிலத்தை கையகப்படுத்தி தந்தால் விரைந்து பணியை முடிக்க தெற்கு ரயில்வே தயாராக இருக்கிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு ராமேஸ்வரம் முதல் தனுஷ்கோடி வரையிலான ரயில் திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 18 கி.மீ.தூரத்திற்கு ரூ. 733 கோடி செலவில் அமைக்க திட்டப்பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் அதற்கு நிலத்தை தமிழக அரசு கையகப்படுத்தி தரவில்லை. அந்த திட்டத்தை கைவிடும் படி ரயில்வே துறைக்கு தமிழக அரசு கடிதம் எழுதி உள்ளது. சுற்றுச்சூழல் பிரச்சினையை மேற்கோள் காட்டி தமிழக அரசு அந்த திட்டத்தை கைவிடும் படி கேட்டுள்ளது.

மேலும் 3 வது ரயில் முனையமான தாம்பரத்தில் கட்டுமான பணி அடுத்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. வணிக வளாகங்கள் கூடிய முனையமாக தனியார் பங்களிப்போடு இந்த திட்டத்தை செயல்டுத்த ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. இந்த ஆண்டு அக்டோபர் மாதம் திட்டறிக்கம் சமர்ப்பிக்கப்படும். சென்னை கடற்கரையில் இருந்து எழும்பூர் நோக்கி 4-வது ரயில் தண்டவாள பணி செப்டம்பர் மாதம் முடியப்போகிறது. அக்டோபர் மாதத்தில் ரயில்கள் இயங்கும். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை ஒட்டிய புதிய கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைக்கப்பட உள்ளது. அதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்தப் பணிகளை முடித்து தமிழக அரசு கொடுத்தவுடன் புதிய ரயில் நிலைய கட்டும் பணிகள் தொடங்கும். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் கிளாம்பாக்கம் ரயில் நிறுத்தம் நடைமுறைக்கு வந்து விடும்” என்றார்.

The post அடுத்த ஆண்டு மார்ச் மாதம் கிளாம்பாக்கம் ரயில் நிறுத்தம் நடைமுறைக்கு வந்து விடும்: தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Clambakkam ,Southern Railway ,general manager ,R. N. ,Singh ,Delhi ,Union Railway ,Minister ,Ashwini Vaishnav ,R. N. Singh ,Dinakaran ,
× RELATED விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு...