×

ஆலங்காயம், ஆம்பூர், நாட்றம்பள்ளியில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாமில் நலத்திட்ட உதவிகள்

*கலெக்டர், எம்எல்ஏக்கள் பங்கேற்பு

ஆலங்காயம் : ஆலங்காயம், ஆம்பூரில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நேற்று நடந்தது. இதில் கலெக்டர் மற்றும் எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.
ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊரகப் பகுதிகளுக்கு மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் மீட்டூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. ஒன்றிய குழுத் தலைவர் சங்கீதா பாரி, துணைத் தலைவர் பூபாலன் ஆகியோர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர். முகாமை கலெக்டர் தர்ப்பகராஜ் மற்றும் ஜோலார்பேட்டை எம்எல்ஏ தேவராஜூ ஆகியோர் ஆய்வு செய்தனர்.

முகாமில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டு துறை, எரிசக்தி மற்றும் மின்சாரத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை, வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன் துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை, தொழிலாளர்கள் நல வாரியம், வேலைவாய்ப்பு துறை, உணவு மற்றும் கூட்டுறவு துறை, மாவட்ட தொழில் மையம், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, இ சேவை மையம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த அலுவலர்கள் கலந்து கண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டனர். மானுக்கள் மீது 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதில், வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அஜித்தா பேகம், ஆலங்காயம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கருணாநிதி, திருநாவுக்கரசு, பூங்குளம், பஞ்சாயத்து தலைவர்கள் அஞ்சலி தினகரன், துளசிராமன், சீனிவாசன், பிரபாகரன், வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆம்பூர்: ஆம்பூர் அடுத்த கைலாசகிரியில் உதயேந்திரம்- உம்ராபாத் சாலையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடந்தது. இந்த முகாம் கைலாசகிரி, நரியம்பட்டு, அயித்தம்பட்டு, சின்னவரிக்கம், சாத்தம்பாக்கம், சோமலாபுரம், பெரியகொம்மேஸ்வரம் ஆகிய ஊராட்சிகளுக்கு நடந்தது. குடியாத்தம் எம்எல்ஏ அமலு விஜயன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.

இந்த முகாமில் மனு பெற்ற ஒரு மணி நேரத்தில் மாற்று திறன் கொண்ட ஒருவருக்கு ஒரு லட்ச ரூபாய் வங்கி கடனுதவி, பயனாளி ஒருவருக்கு வாரிசு சான்று, 3 பேருக்கு மின்வாரிய பெயர் மாற்றம் ஆணையை எம்எல்ஏ அமலு விஜயன் வழங்கினார். தாசில்தார் மோகன், மாதனூர் ஒன்றிய குழு தலைவர் சுரேஷ்குமார், துணை தலைவர் சாந்தி சீனிவாசன், வட்ட வழங்கல் அலுவலர் பாரதி, மாதனூர் ஒன்றிய பிடி ஓ மணவாளன், ஒன்றிய கவுன்சிலர்கள் கார்த்திக், கார்த்திக் ஜவஹர், ஆப்ரின் தாஜ் , ஊராட்சி தலைவர்கள் ரமணி, பாரதி, சர்மிளா, ஷோபனா, சண்முகம், சோபனா, கலாவதி மற்றும் பல்வேறு கிராம ஊராட்சிகளை சார்ந்த திரளான பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நாட்றம்பள்ளி: நாட்றம்பள்ளி அடுத்த புதுப்பேட்டை பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் ஐந்து ஊராட்சிகளுக்கு மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடைபெற்றது. ஒன்றிய குழு தலைவர் சத்யா சதீஷ்குமார் தலைமை தாங்கினார். ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் துரை வரவேற்றார். நாட்றம்பள்ளி தாசில்தார் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். எம்எல்ஏ தேவராஜூ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

அதேபோல், பச்சூர் சென்றாய சுவாமி கோயில் அருகே நடந்த சிறப்பு முகாமை கலெக்டர் தர்ப்பகராஜ் தலைமை தாங்கி முகாமை துவக்கி வைத்தார். இதில், எம்எல்ஏ க.தேவராஜூ, மாவட்ட ஊராட்சிகள் மற்றும் திட்டக்குழு தலைவர் என்.கே.ஆர்.சூர்யாகுமார், நாட்றம்பள்ளி ஒன்றிய குழு தலைவர் வெண்மதி முனுசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக ஜோலார்பேட்டை, கந்திலி, நாட்றம்பள்ளி, ஆலங்காயம், மாதனூர் வட்டாரங்களில் நடந்த மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாமில் பொதுமக்களிடமிருந்து மொத்தம் 2,310 மனுக்கள் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

The post ஆலங்காயம், ஆம்பூர், நாட்றம்பள்ளியில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாமில் நலத்திட்ட உதவிகள் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Project Special Camp ,Alankayam, ,Ambur ,Nadrampalli ,Alangayam ,Alangayam, Ampur ,Chief Minister Project Special Camp ,Alankayam Panchayat Union ,Nattrampalli ,Dinakaran ,
× RELATED செட்டிகுளத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்