×

அதிமுக செயல்வீரர்கள் கூட்டம்

 

வருசநாடு, அக். 16: கடமலைக்குண்டு கிராமத்தில் அதிமுக செயல்வீரர் கூட்டம் நடைபெற்றது. தேனி கிழக்கு மாவட்டம் கடமலை – மயிலை அதிமுக வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியம் சார்பில் அதிமுக செயல் வீரர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கடமலைக்குண்டு தனியார் மண்டபத்தில் நடந்தது. வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் செந்தட்டிக்காளை தலைமை வகித்தார். தெற்கு ஒன்றிய கழக செயலாளர் இராமர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக தேனி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் முறுக்கோடை ராமர், அமைப்புச் செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகள் 2026 சட்டமன்றத் தேர்தலை மையமாக வைத்து எவ்வாறு செயல்பட வேண்டும் என பேசினர். முன்னாள் எம்பி பார்த்திபன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் கணேசன், மாநில ஜெ பேரவை இணைச் செயலாளர் ஜெயக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். 20க்கும் மேற்பட்ட ஓபிஎஸ் அணி, அமமுகவினர் அக்கட்சிகளில் இருந்து விலகி அதிமுகவில் இனைந்தனர்.

The post அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Varusanadu ,Kadamalaikundu ,Theni East ,District ,Kadamalai ,AIADMK North and South Union ,Kadamalaikund ,Dinakaran ,
× RELATED கடமலை மயிலை ஒன்றியத்தில் மூல வைகை...