×

பெரம்பலூர் மாவட்ட மகளிர் தையல் கூட்டுறவு சங்கத்தினர் கலெக்டரிடம் கோரிக்கை மனு

 

பெரம்பலூர், ஜூலை 24: அரியலூர் மாவட்டத்திலுள்ள 2 ஒன்றியங்களை பெரம்பலூர் மாவட்டத்துடன் சேர்க்க கோரி பெரம்பலூர் மாவட்ட மகளிர் தையல் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் கலெக்டர் கிரேஸ் பச்சாவ்விடம் கோரிக்கை மனு அளித்தனர். பெரம்பலூர், அரியலூர் ஆகிய 2 மாவட்டங்களுக்கும் சேர்த்து, பெரம்பலூர் மாவட்ட மகளிர் தையல் கூட்டுறவு சங்கம் இயங்கி வருகிறது. அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளின் சீருடைகளை தைத்துக் கொடுக்கும் பணியை இவர்கள் செய்து வருகின்றனர்.

மொத்த உறுப்பினர்கள் 809 பேர் உள்ளனர். சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட செயலாளராக பிச்சப்பிள்ளை என்பவரும், அரியலூர் மாவட்டச் செயலாளராக புகழேந்தியும் உள்ளனர். 809 உறுப்பினர்களில் பெரம்பலூர் மாவட்டத்தில் 327 பேரும், அரியலூரில் 140 பேரும் ஆக்டிவாக பணிபுரிகின்றனர். ஒரு கல்வியாண்டில் பெரம்பலூர் மாவட்டத்திற்கு சுமார் 60,000 துணிகளும், அரியலூர் மாவட்டத்திற்கு சுமார் 1,50,000 துணிகளும் வருகிறது. இதை அனைவருக்கும் சமமாகப் பிரித்து தைத்தும் வருகின்றனர்.

துணி ஒன்றுக்கு ரூ.12ல் முதல் 42 வரை கூலியாக வழங்குகின்றனர். சென்னையிலுள்ள சமூக நல ஆணையர் உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்டம், அரியலூர் மாவட்டம் தனித்தனியாக பிரிக்கும் பணி நடக்கிறது. இதனால், நேற்று பிற்பகல் 2 மணியளவில் பெரம்பலூர் மாவட்ட மகளிர் தையல் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் 100 பேர் பெரம்பலூர் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில், பெரம்பலூர் மாவட்டத்தில் அதிக உறுப்பினர்களுடன் குறைந்த துணியில்வேலை பார்க்கும் தங்களுக்கு வாழ் வாதாரம்பாதிக்கும். எனவே, அரியலூர் மாவட்டத்திலூள்ள 2 வட்டாரங்களை பெரம்பலூர் மாவட்டத்துடன் இணைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

The post பெரம்பலூர் மாவட்ட மகளிர் தையல் கூட்டுறவு சங்கத்தினர் கலெக்டரிடம் கோரிக்கை மனு appeared first on Dinakaran.

Tags : Perambalur District Women's Sewing Co-operative Society ,Perambalur ,Perambalur District Women's Tailoring Co-operative Society ,Collector ,Grace Bachau ,Ariyalur District ,Perambalur District ,Ariyalur ,Dinakaran ,
× RELATED பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில்...