×
Saravana Stores

விலை குறைபவை எகிறுபவை எவை? பட்ஜெட்டில் சுங்க வரி அறிவிப்புகள் மூலம் இனிமேல் விலை குறையக்கூடிய மற்றும் விலை அதிகரிக்கக் கூடிய பொருட்கள்:

விலை குறைபவை:

* தங்கக் கட்டிகள்

* வெள்ளிக் கட்டிகள்

* பிளாட்டினம், பல்லேடியம், ஆஸ்மியம், ருத்தேனியம், இரிடியம்

* அரிதான உலோக நாணயங்கள்

* உயர்ரக உலோக கரைசல்கள், உலோக கலவைகள் மற்றும் வினையூக்கி மாற்றிகளில் பயன்படுத்தப்படும் பிளாட்டினம், பல்லேடியம்

* புற்றுநோய்க்கான மருந்துகள் – ட்ராஸ்டுஜுமாப் டெரக்ஸ்டெகன், ஒசிமெர்டினிப், துர்வாலுமாப்

* எலும்புகளில் பதிக்கப்படும் உபகரணங்களை தயாரிக்க பயன்படுத்தும் அனைத்து வகையான பாலிஎத்தீலின்

* மருத்துவ, அறுவை சிகிச்சை, பல் அல்லது கால்நடை மருத்துவப் பயன்பாட்டிற்கான எக்ஸ்-ரே இயந்திரங்களை தயாரிக்க பயன்படுத்தப்படும் எக்ஸ்ரே குழாய்கள் மற்றும் பிளாட் பேனல் டிடெக்டர்கள் (சிண்டிலேட்டர்கள் உட்பட) உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள்.

* இறக்குமதி செய்யப்பட்ட மொபைல் போன்

* மொபைலின் சார்ஜர் மற்றும் அடாப்டர்

* மொபைல் போனின் பிரிண்டட் சர்க்யூட் போர்டு அசெம்பிளி

* சோலார் செல்கள் அல்லது சோலார் மாடுல்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் மூலதன பொருட்கள் மற்றும் அத்தகைய மூலதன பொருட்களை உற்பத்தி செய்வதற்கான பாகங்கள்

* நீர்வாழ் உயிரினங்களுக்கான தீவன உற்பத்தியில் பயன்படுத்தப்படும் மீன் கொழுப்பு எண்ணெய், கச்சா மீன் எண்ணெய்

* இயற்கை கிராஃபைட்

* அனைத்து வகையான இயற்கை மணல்கள்

* குவார்ட்ஸ்

* முக்கியமான கனிமங்கள்

* லித்தியம் கார்பனேட்டுகள்

* லித்தியம் ஆக்சைடு மற்றும் ஹைட்ராக்சைடு

* பொட்டாசியத்தின் நைட்ரேட்டுகள்

* பெரோ நிக்கல் மற்றும் சுத்திகரிக்கப்படாத காப்பர்

* ஸ்பான்டெக்ஸ் நூல் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் மெத்திலீன் டிபெனைல் டி-ஐசோசயனேட்

விலை அதிகரிப்பவை:

* பிவிசி ப்ளெக்ஸ் பேனர்கள்

* தோட்டத்தில் வைக்கப்படும் பெரிய குடைகள்

* ஆய்வக ரசாயனங்கள்

* சோலார் செல்கள் அல்லது சோலார் மாடுல்கள் தயாரிப்பதற்கான சோலார் கண்ணாடிகள் மற்றும் இணைக்கப்பட்ட டின்ட் காப்பர்.

The post விலை குறைபவை எகிறுபவை எவை? பட்ஜெட்டில் சுங்க வரி அறிவிப்புகள் மூலம் இனிமேல் விலை குறையக்கூடிய மற்றும் விலை அதிகரிக்கக் கூடிய பொருட்கள்: appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED விபத்தில் புதுவை தினகரன் பொது மேலாளர் பலி