×

கேரளாவுக்கு எதுவும் கிடைக்கவில்லை: நிதியமைச்சர் பாலகோபால் வேதனை

திருவனந்தபுரம்: நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளது மக்கள் விரோத பட்ஜெட் என்றும், பாஜ கணக்கை தொடங்கியும் கேரளாவுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை என்றும் நிதியமைச்சர் பாலகோபால் கூறினார். ஒன்றிய பட்ஜெட் குறித்து கேரள நிதியமைச்சர் பாலகோபால் கூறியது: நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள பட்ஜெட் மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. இது மக்கள் விரோத பட்ஜெட் ஆகும். இரண்டு மாநிலங்களுக்கு மட்டுமே இதில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவை மாற்றி அனைத்து மாநிலங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். கேரளாவில் பாஜ கணக்கை தொடங்கியதால் மாநிலத்திற்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று அனைவரும் கருதினர். ஆனால் ஏமாற்றம்தான் கிடைத்துள்ளது. கேரளாவில் உள்ள ஒன்றிய அமைச்சர்களும், காங்கிரஸ் கூட்டணி எம்பிக்களும் இதை எதிர்த்து போராட முன்வர வேண்டும். தங்களது கூட்டணியின் நலத்திற்காக குறிப்பிட்ட மாநிலங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்துள்ளது இந்திய வரலாற்றில் இதுவரை கேள்விப்படாத ஒன்றாகும். இவ்வாறு அவர் கூறினார்.

The post கேரளாவுக்கு எதுவும் கிடைக்கவில்லை: நிதியமைச்சர் பாலகோபால் வேதனை appeared first on Dinakaran.

Tags : Kerala ,Finance Minister Balagopal Angam ,Thiruvananthapuram ,Finance Minister ,Balagopal ,Nirmala Sitharaman ,BJP ,Union Budget ,Dinakaran ,
× RELATED நடிகை பலாத்கார வழக்கில் திலீப்புக்கு...