×

இணையவழியில் கட்டிட அனுமதி வழங்குவதற்கான கட்டணம் நிர்ணயம்: அரசாணை வெளியீடு

சென்னை: தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: 2500 சதுர அடி வரை பரப்பளவுள்ள மனையில் 3500 சதுர அடி வரையிலான தரைத்தளம் அல்லது முதல் தளத்துடன் கூடிய குடியிருப்பு கட்டிடங்கள் கட்டுமானத்திற்கு இணைய வழி வாயிலாக கட்டிட அனுமதி வழங்குவதற்கு செலுத்த வேண்டிய கட்டணங்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி சென்னை மாநகராட்சியில் 3500 சதுர அடி குடியிருப்புகளுக்கான கட்டுமான அனுமதி கட்டணமாக ஒரு சதுர அடிக்கு ரூ.100 நிர்ணயம் செய்யப்படுகிறது.

மேலும் சிறப்பு நிலை ‘ஏ’ மாநகராட்சி ஒரு சதுர அடி ரூ.88, சிறப்பு நிலை ‘பி’ ஒரு ச.அடி ரூ.84, தேர்வு நிலை மாநகராட்சிகள் ஒரு சதுர அடி ரூ.79, நிலை – 1 மாநகராட்சிகள் ஒரு ச.அடி ரூ.74, நிலை – 2 மாநகராட்சிகள் ஒரு ச.அடி ரூ.74 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. அதேபோல் நகராட்சி குடியிருப்புகளுக்கான ஒருங்கிணைந்த கட்டணத்தை பொறுத்தவரை, சிறப்பு நிலை நகராட்சிகள் ஒரு சதுர அடி ரூ.74, தேர்வு நிலை மாநகராட்சிகள் ஒரு சதுர அடி ரூ.74, நிலை – 1 நகராட்சிகள் ஒரு சதுர அடி ரூ.70, நிலை – 2 நகராட்சிகள் ஒரு சதுர அடி ரூ.70 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

பேரூராட்சிகளுக்கான குடியிருப்பு ஒருங்கிணைந்த கட்டணத்தை பொறுத்தவரை சிறப்பு நிலை பேரூராட்சிகள் ஒரு சதுர அடி ரூ.70, தேர்வு நிலை பேரூராட்சிகள் ஒரு சதுர அடி ரூ.65, நிலை – 1 பேரூராட்சிகள் ஒரு சதுர அடி ரூ.55, நிலை – 2 பேரூராட்சிகள் ஒரு சதுர அடி ரூ.45 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

The post இணையவழியில் கட்டிட அனுமதி வழங்குவதற்கான கட்டணம் நிர்ணயம்: அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu government ,
× RELATED தமிழ்நாட்டில் காற்றாலை மின்உற்பத்தி...