×
Saravana Stores

தொழிலாளர்களுக்கு வாடகை குடியிருப்பு திட்டம்.. தொழிலாளர் வளர்ச்சிக்கு 3 அம்ச திட்டம் : நிர்மலா சீதாராமன் அசத்தல் அறிவிப்பு!!

டெல்லி : ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள ஒன்றிய பட்ஜெட்டில்ம் இளைஞர்களுக்கு சிறப்பு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. மேலும் கல்வி, விவசாயம் உள்ளிட்ட துறைகளிலும் முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு..

*தொழிலாளர் வளர்ச்சிக்கு 3 அம்ச திட்டம் : தொழில் உற்பத்தி துறையில் முதல்முறையாக பணிக்கு சேரும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி சந்தாவை அரசே செலுத்தும்; அனைத்து துறைகளிலும் கூடுதலாக பணிக்கு அமர்த்தப்படும் தொழிலாளர்களுக்கு வைப்ப நிதி சந்தாவில் ரூ.3000 அரசு செலுத்தும்.

*பீகார், ஆந்திரா, ஒடிசா, ஜார்க்கண்ட், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களை மேம்படுத்த சிறப்புத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

*ஆந்திரா மாநில மறுசீரமைப்பு சிறப்புத் திட்டம் அனுமதிக்கப்பட்டு, அமராவதி நகர வளர்ச்சிக்கு ரூ.15000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

*சென்னை-ஹைதராபாத்-விசாகப்பட்டினம் தொழில்வழித்தட திட்டம் செயல்படுத்தப்படும்.

*அனைவருக்கும் வீடு கட்டும் பிரதமரின் திட்டத்தின் கீழ் மேலும் 3 கோடி வீடுகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

*9 முன்னுரிமை திட்டங்கள்
1. வேளாண் உற்பத்தி
2. வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடு
3. அனைவரையும் உள்ளடக்கிய மனித வள மேம்பாடு
4. உற்பத்தி மற்றும் சேவைத்துறை
5. நகர்ப்புற வளர்ச்சி
6. எரிசக்தி பாதுகாப்பு
7. உள்கட்டமைப்பு
8. புதிய கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு
9. புதிய தலைமுறை சீர்திருத்தங்கள்

*ரூ.26,000 கோடியில் பீகாரில் விமான நிலையங்கள், மருத்துவக் கல்லூரிகள் உள்ளிட்டவை அமைக்கப்படும்

*நாட்டின் ஊரக வளர்ச்சி மற்றும் உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு ரூ.2.66 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

*முத்ரா கடனுதவி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தொகை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக அதிகரிக்கப்படும்.

*பெண் குழந்தைகள், பெண்கள் மேம்பாட்டிற்கு ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.வீட்டு வசதி திட்டங்களுக்கு ரூ.2.2 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

*நாடு முழுவதும் புதிதாக 12 தொழிற்பூங்காக்கள் உருவாக்கப்படும்.

*தொழிலாளர்களுக்கு குறைந்த விலையில் வாடகை குடியிருப்பை உருவாக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

*அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் கூடிய இ-காமர்ஸ் ஏற்றுமதி மையங்கள் அமைக்கப்படும்.உள்நாட்டில் உள்ள தாதுக்கள், கனிம வளங்களை மறுசுழற்சி செய்யும் வகையில் புதிய திட்டம்.

*புதிய சாலை இணைப்பு திட்டங்களை மேம்படுத்த ரூ.26,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். திவாலான நிதி நிறுவனங்களிடம் இருந்து மக்களுக்கு பணத்தை பெற்றுத்தர ஆணையம் அமைக்கப்படும்

*மாநில அரசு, வங்கிகளுடன் இணைந்து நகர்ப்புற திடக்கழிவு மேலாண்மைக்கு புதிய திட்டம்.

*உள்நாட்டு உற்பத்தியில் 3.4% உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு ஒதுக்க்கப்பட்டது.

*நாட்டின் உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களுக்கு மேலும் ரூ.11.11 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

*பீகார் மாநில வெள்ள தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு ரூ.11,500 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

*பீகாரில் 2400 மெகா வாட் மின் உற்பத்தி செய்யும் வகையில் ஆலைகள் அமைக்க ரூ.21,400 கோடி ஒதுக்கப்பட்டது.

*63,000 கிராமங்களில் வசிக்கும் 5 கோடி பழங்குடியின மக்களுக்கான சிறப்பு திட்டங்களை செயல்படுத்த ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

*25,000 ஊரக வாழ்விடங்களை இணைக்கும் வகையில் கிராம சாலை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

*வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அசாம், இமாச்சல், சிக்கிம் உத்தரகாண்ட் மாநிலங்களில் மறுகட்டமைப்பு மேற்கொள்ள நிதி வழங்கப்படும்.

*நகர்புறங்களில் ஒரு கோடி ஏழை, நடுத்தர குடும்பங்களுக்கு வீட்டு வசதி திட்டத்திற்காக ரூ.10 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு கோடி வீடுகளில் சூரியஒளி மின்சார வசதி ஏற்படுத்தப்படும்.

*பீகாரில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த 2 கோயில்களுக்கு வழித்தடங்கள் மேம்படுத்தப்படும். கயாவில் உள்ள விஷ்ணு கோயில் மற்றும் புத்த கயாவில் உள்ள மகா போதி கோயில்களுக்கான வழித்தடங்கள் மேம்படுத்தப்படும்.

*விண்வெளி ஆராய்ச்சி | திட்டங்களுக்கு ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். இந்தியாவில் உள்ள 500 டாப் நிறுவனங்களில் 1 கோடி இளைஞர்களுக்கு மாதம் ₹5000 ஊக்கத் தொகையுடன் கூடிய பயிற்சி அளிக்கப்படும்.

*ஊரக வளர்ச்சித்துறைக்கு ரூ.2.66 லட்சம் கோடி ஒதுக்கப்படும். சிறு, குறு தொழில் (MSME) நிறுவனங்களின் |வளர்ச்சிக்காக பட்ஜெட்டில் ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு!

*கிழக்கு மாநிலங்களான பீகார், ஜார்க்கண்ட், மே.வங்கம், ஒடிசா, ஆந்திராவை மேம்படுத்த தனித் திட்டம் வகுக்கப்படும். பாட்னா-பூர்னியா விரைவுச் சாலை, பக்சால்-பாகல்பூர் விரைவுச் சாலை, புத்தகயா-வைசாலி சாலை கட்டப்படும். விரைவுச் சாலைகள் மற்றும் கங்கை நதியில் ரூ.26,000 கோடியில் 2 பாலங்கள் அமைக்கப்படும்.

 

The post தொழிலாளர்களுக்கு வாடகை குடியிருப்பு திட்டம்.. தொழிலாளர் வளர்ச்சிக்கு 3 அம்ச திட்டம் : நிர்மலா சீதாராமன் அசத்தல் அறிவிப்பு!! appeared first on Dinakaran.

Tags : Nirmala ,Delhi ,EU ,Union Finance Minister ,Nirmala Sitharaman ,Dinakaran ,
× RELATED பூதாகரமாகும் மியூல் வங்கிக் கணக்கு...