ஈரோடு, ஜூலை 23: தனியார் தொலை தொடர்பு நிறுவனத்தில் பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான ஆட்கள் தேர்வு முகாம் வருகின்ற 26ம் தேதி நடைபெற உள்ளது. இது தொடர்பாக கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பிரபல தனியார் நிறுவனத்துக்கான வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 26ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் பிரபல தனியார் நிறுவனத்தின் வேலையளிப்போர் கலந்து கொண்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள 4000க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.
பட்டப்படிப்பு ஐடிஐ மற்றும் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு ேஹாம் சேல்ஸ் ஆபிசர், சேனல் சேல்ஸ் ஆபிசர், அசிஸ்டென்ட் மானேஜர், மானேஜர், என்டர்பிரைசஸ் சேல்ஸ் ஆபிசர், டிஜிட்டல் ரிப்பேர் ஸ்பெஷலிஸ்ட், பைபர் இன்ஜினீயர் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் வேலைவாய்ப்பு உள்ளது. வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மூலம் நடத்தப்படும் இவ்வேலைவாய்ப்பு முகாம், வேலைநாடுநர்கள் மற்றும் வேலை அளிப்பவர்களுக்கு முற்றிலும் இலவசமாக செயல்படுத்தப்படுகிறது. எனவே, ஈரோடு மாவட்டத்தில் தனியார்துறையில் பணிபுரிய ஆர்வமாக உள்ள அனைவரும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம். மேலும், விவரங்களுக்கு ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post தனியார் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு முகாம் appeared first on Dinakaran.