நித்திரவிளை, ஜூலை 23: கொல்லங்கோடு அருகே வள்ளவிளை வட்டபுன்னவிளாகம் பகுதியை சேர்ந்தவர் ஜாண்சன் மகன் ஜாக்கி (16). இவர் வள்ளவிளை சுனாமி காலனி பகுதியை சேர்ந்த தனது இரண்டு நண்பர்களுடன், ஒரு பைக்கில் கடந்த 17ம் தேதி நள்ளிரவில் பழைய உச்சகடையில் இருந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். ஒரு நண்பர் பைக்கை ஓட்டினார். பைக் காக்கவிளை சர்ச் அருகே வந்த போது ைபக்கை ஓட்டியவர் திடீரென பிரேக் பிடித்ததில் ஜாக்கியும் நண்பரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த ஜாக்கி, திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். நண்பர் கொல்லங்கோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இது சம்பந்தமாக ஜாக்கியின் அக்கா ஜோஸ்பின்(25) கொல்லங்கோடு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் பைக் ஓட்டிய நண்பன் மீது வழக்கு பதிவு செய்து, விசாரித்து வந்தனர். இந்நிலையில் நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி ஜாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். ஜாக்கி பதினொன்றாவது வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.
The post கொல்லங்கோடு அருகே பைக் விபத்தில் சிறுவன் சாவு appeared first on Dinakaran.