×

தொடர் குற்றங்களில் ஈடுபட்டதாக 14 நாட்களில் 11 பேர் குண்டாசில் கைது: காவல்துறை நடவடிக்கை

சென்னை: சென்னையில் கடந்த 14 நாட்களில் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்ததாக 11 பேரை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர். சென்னை பெருநகர காவல் எல்லையில் கொலை உள்ளிட்ட தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வரும் நபர்களை போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், கைது ெசய்து வருகின்றனர்.

அந்த வகையில், கடந்த 8ம் தேதி முதல் 21ம் தேதி வரை, அண்ணாநகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக மாங்காடு பகுதியை சேர்ந்த கார்த்திக் கிரண் (31), அரும்பாக்கம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக சாலிகிராமத்தை சேர்ந்த அசோக்குமார் (34), கே.கே.நகரை சேர்ந்த மணிகண்டன் (எ) மணி (34), மடிபாக்கம் பகுதியை சேர்ந்த மகேஷ் (44), ஓட்டேரி பகுதியில் கஞ்சா விற்பனை செய்தாக அருண் (38) மற்றும் ஆர்.கே.நகர் காவல் எல்லையில் தர்மா என்பவரை கொலை செய்த வழக்கில் தொடர்புடைய கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்த கிஷோர் குமார் (25), தண்டையார்பேட்டையை சேர்ந்த ஜெகன் (எ) ஜெகன்னாத் யாதவ் (24), தமிழ் (எ) தமிழ்செல்வன் (23), பாலாஜி (23), வளசரவாக்கம் பகுதியில் பெட்ரோல் குண்டு வீசிய போரூர் காரம்பாக்கத்தை சேர்ந்த முருகன் (21), புழல் பகுதியில் திருடியாதாக கொட்டிவாக்கத்தை சேர்ந்த ரமேஷ் (32) ஆகிய 11 பேரை போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

The post தொடர் குற்றங்களில் ஈடுபட்டதாக 14 நாட்களில் 11 பேர் குண்டாசில் கைது: காவல்துறை நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Guntazil ,Chennai ,Chennai Metropolitan Police ,
× RELATED தொடர் குற்றங்களில் ஈடுபட்ட 26 பேர்...