- கே சூரஜ் ரேவண்ணா
- பெங்களூரு
- முன்னாள்
- தேவே கவுடா
- சூரஜ் ரேவன்னா
- பரப்பன அக்ரஹாரா சிறை
- பெங்களூரு மக்கள் பிரதிநிதி நீதிமன்றம்
பெங்களூரு: முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் சூரஜ் ரேவண்ணா ஓரினசேர்க்கை புகாரில் கடந்த மாதம் கைது செய்யப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையில் தன்னை ஜாமீனில் விடுதலை செய்யகோரி பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அம்மனுவை விசாரணை நடத்திய நீதிமன்றம் நேற்று வழங்கிய தீர்ப்பில், குற்றவாளி ரூ.2 லட்சம் பிணை தொகையும் 2 நபர்கள் பிணை வழங்க வேண்டும். போலீஸ் தரப்பில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும் வரை அல்லது வரும் 6 மாதங்கள் வரை ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் போலீஸ் நிலையம் சென்று கையெழுத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
The post ஓரின சேர்க்கை சூரஜ் ரேவண்ணா ஜாமீனில் விடுதலை appeared first on Dinakaran.