- பீகார்
- யூனியன்
- பாட்னா
- ஒன்றிய பிஜேபி ஊராட்சி
- யூனியன் அரசு
- முதல் அமைச்சர்
- நிதீஷ் குமார்
- நிதீஷ் குமார்
- ஜே.டி.யு.
- தின மலர்
பாட்னா: பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வாய்ப்பில்லை என ஒன்றிய பாஜ அரசு தெரிவித்துள்ளது. ஒன்றிய அரசின் இந்த அறிவிப்பு, பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று நிதிஷ்குமாரின் ஜேடியு கட்சி நீண்ட காலமாக கோரி வருகிறது. நாடாளுமன்ற கூட்டத் தொடருக்கு முன்னதாக நேற்றுமுன்தினம் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் அந்த கட்சி கோரிக்கையை வலியுறுத்தியது. இந்நிலையில், ஒன்றிய அமைச்சர்கள் குழு அறிக்கை 2012-ன் படி பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க முடியாது என்று மோடி தலைமையிலான தேஜ கூட்டணி அரசு நேற்று தெரிவித்துள்ளது.
ஜேடியு எம்பி ராம்பிரித் மண்டலுக்கு, ஒன்றிய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி எழுதியுள்ள கடிதத்தில் ஒன்றிய அரசின் முடிவு தெரிவிக் கப்பட்டுள்ளது.
நிதிஷ் பதவி விலக வேண்டும்: லாலு இதற்கிடையே ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் கூறுகையில்,‘‘ஆட்சியை காப்பாற்றுவதற்காக இதில் நிதிஷ்குமார் சமரசம் செய்து உள்ளார். மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து பெற்று தருவேன் என்று அவர் உறுதி அளித்தார். தற்போது ஒன்றிய அரசு மறுத்துள்ளது. எனவே அவர் ராஜினாமா செய்ய வேண்டும்’’ என்றார்.
The post பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வாய்ப்பில்லை: ஒன்றிய அரசு கைவிரிப்பு appeared first on Dinakaran.