சாத்தூர்: விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே ஒரு அரசுப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிபவர் தங்கப்பாண்டியன். திருமணமான இவர், அதே பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வரும் 13 வயது மாணவியிடம் பழகினார். அந்த மாணவியிடம் செல்போன் இல்லாததால் அவரது தாய் செல்போன் நம்பரை வாங்கினார். அந்த எண்ணுக்கு கடந்த சில மாதங்களாக தொடர்ந்து ஆபாச படங்கள் மற்றும் ஆபாச எஸ்எம்எஸ் வந்துள்ளன. ஆசிரியர் தங்கப்பாண்டியனின் மனைவி தனது கணவரின் செல்போனில் இருந்து மற்றொரு எண்ணுக்கு ஆபாச படங்கள் அனுப்பப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அந்த நம்பருக்கு தொடர்புகொண்டு பேசியுள்ளார். இதையறிந்த மாணவியின் தந்தை போனை வாங்கி பார்த்தபோது, ஆபாச படங்கள் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து மாணவியிடம் விசாரித்ததில் ஆசிரியர் தங்கப்பாண்டியனின் செல்போனில் இருந்து அனுப்பப்பட்டது தெரிந்தது. இதையடுத்து மாணவியின் தந்தை சாத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார், போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிந்து ஆசிரியர் தங்கப்பாண்டியனை கைது செய்தனர்.
The post மாணவிக்கு ஆபாச படம் அனுப்பி டார்ச்சர் பள்ளி ஆசிரியரை மனைவியே பெற்றோரிடம் சிக்க வைத்தார்: போக்சோவில் கைது appeared first on Dinakaran.