மதுரை: ஏழை, எளிய மக்களின் மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதாக தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு தெரிவித்துள்ளது. தஞ்சையைச் சேர்ந்த தலைமை ஆசிரியை சசிகலா ராணி, மதுரையைச் சேர்ந்த தலைமை ஆசிரியை கலைச்செல்வி மனு தாக்கல் செய்துள்ளனர். 2 பேரும் தலைமை ஆசிரியர்களாக இருந்தபோது பள்ளியில் மடிக்கணினிகள் திருடு போனதாக வழக்கு தொடர்ந்திருந்தனர். வழக்கு நிலுவையில் உள்ளதால் தங்களை ஓய்வுபெற அனுமதித்து, பணப்பலன் வழங்கவில்லை என புகார் அளித்தனர். தங்களை ஓய்வுபெற அனுமதித்து ஓய்வூதியம் உள்ளிட்ட பணப்பலன்களை வழங்க உத்தரவிடுமாறு மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர். “தலைமை ஆசிரியர்களை சாதாரண மனிதர்களை போல நடத்துவதை ஏற்க முடியாது. லேப்டாப் திருட்டை தடுக்க போலீஸ் பாதுகாப்பில் மடிக்கணினிகளை வைத்து மாணவர்களிடம் ஒப்படைக்கலாம். மனுதாரர்களை ஓய்வுபெற அனுமதித்து அவர்களின் ஓய்வூதிய பலன்களை உடனே வழங்க வேண்டும்” என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி தெரிவித்துள்ளார்.
The post ஏழை, எளிய மக்களின் மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதாக தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு appeared first on Dinakaran.