- நிதி அமைச்சர்
- நிர்மலா சீதாராமன்
- மக்களவை
- தில்லி
- பாராளுமன்ற பருவமழை அமர்வு
- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
- தின மலர்
டெல்லி: மக்களவையில் பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்றத் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. இன்று தொடங்கிய நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆகஸ்ட் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் மக்களவையில் பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். 2023-24-ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை தொடர்பான புள்ளி விவர அறிக்கையையும் தாக்கல் செய்தார். 2023-2024 பொருளாதார ஆய்வறிக்கையின் படி சில குறிப்பிட்ட உணவுப் பொருட்களின் பணவீக்கம் அதிகமாக இருந்தாலும், மொத்த பணவீக்க விகிதம் கட்டுப்பாட்டில் உள்ளது.
பொருளாதார செயல்பாடு, பணவீக்கம், நிதிப்பற்றாக்குறை, வளர்ச்சி போக்கு அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக, 2025ம் நிதியாண்டில் உண்மையான ஜி.டி.பி. வளர்ச்சி 6.5 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை இருக்கும் என கணிக்கப்பட்டிருப்பதாக பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமை பொருளாதார ஆலோசகரின் வழிகாட்டுதலுடன் பொருளாதார ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. மக்களவையை அடுத்து மாநிலங்களவையிலும் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.
The post மக்களவையில் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் appeared first on Dinakaran.