×

தங்கம் என பித்தளையை விற்க முயன்றவர் கைது

*2 கிலோ போலி நகைகள் பறிமுதல்

திருப்பூர் : திருப்பூரில் தங்கம் என பித்தளையை விற்க முயன்றவர் கைது செய்யப்பட்டார்.திருப்பூர் கிருஷ்ணா நகர் பகுதியை சேர்ந்த ஜீவா (30). பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். திருப்பூர் ரயில் நிலையம் அருகே இவரிடம் அறிமுகமான நபர் ஒருவர் மும்பையில் இருந்து மொத்தமாக தங்கத்தினை பெற்று நகைகளாக உற்பத்தி செய்து விற்பனை செய்து வருவதாகவும், தன்னிடம் உள்ள ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகைகளை பெற்று முன் பணமாக ரூ.5 லட்சமும், நகைகளை விற்ற பின் ரூ.5 லட்சமும் தரலாம் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் அவரிடமிருந்த நகைகளிலிருந்து ஒரு சிறு பகுதியை சோதனைக்காக கொடுத்துள்ளார்.

சோதனை செய்து பார்த்ததில் அது உண்மையான தங்கம் என தெரியவந்துள்ளது. இருப்பினும் அவர் கூறியதில் சந்தேகம் ஏற்பட்ட ஜீவா வடக்கு குற்றவியல் போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நேற்று ரயில் நிலையம் அருகே வந்த அந்த நபரை போலீசார் பிடிக்க முயன்றனர். அப்போது அவர் தப்பியோட முயன்றார். இதையடுத்து அவரை போலீசார் துரத்திப் பிடித்தனர். பின்னர அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், அவர் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பாபு (58) என்பது தெரியவந்தத. பல கொள்ளை சம்பவங்களில் இவர் ஈடுபட்டு பின்னர் ஆந்திராவைச் சேர்ந்த ராம்ஜி என்பவரின் குழுவில் இருந்துள்ளார். பின்னர் அவரிடமிருந்து பிரிந்து தானாக மோசடி சம்பவங்களில் ஈடுபட தொடங்கியுள்ளார். மேலும் பித்தளை நகைகள் மீது தங்க முலாம் பூசி ஜீவாவிடம் மோசடியில் ஈடுபட முயன்றது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து பாபுவை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 2 கிலோ எடையுள்ள போலி நகைகளை பறிமுதல் செய்தனர்.

The post தங்கம் என பித்தளையை விற்க முயன்றவர் கைது appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Jeeva ,Krishna Nagar ,Banyan ,Dinakaran ,
× RELATED அறிவில்லாம கேட்குறாங்க..பாலியல் விவகார கேள்விக்கு நடிகர் ஜீவா ஆவேசம்