- காரைக்கால் ஒழுங்குமுறை கூடம்
- காரைக்கால்
- காரைக்கால் ஒழுங்குமுறை விற்பனை கூடம்
- காரைக்கால் விற்பனை குழு காரைக்கால்
- ஒழுங்குமுறை மண்டபம்
- தின மலர்
காரைக்கால்,ஜூலை 22: காரைக்கால் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாரத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையும் பருத்தி ஏலமானது மாவட்ட ஆட்சியர் மற்றும் தலைவர், காரைக்கால் விற்பனைக்குழு காரைக்கால் அவர்களின் உத்தரவின் படி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக இந்த வாரம் சனிக்கிழமை நேற்று முன்தினம் பருத்தி ஏலமானது நடைபெற்றது. இதில் காரைக்கால் பகுதியை சேர்ந்த பருத்தி சாகுபடி செய்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த பருத்தியினை கொண்டு வந்து விற்பனை ஏலத்தில் கலந்து கொண்டனர். இதில் சுமார் 146.06 குவிண்டால் எடைகொண்ட தரமான பருத்தி பஞ்சு ஏலத்தில் விடப்பட்டது.
கடந்த வாரம் ஏலத்தினை காட்டிலும், இந்த வாரம் பஞ்சு விலையானது அதிக விலைக்கு ஏலம் விடப்பட்டது. அதாவது குவிண்டால் ஒன்றுக்கு அதிகபட்சம் ₹7450-ம் (ஒரு கிலோ ₹74.50) குறைந்தபட்ச விலையாக ₹6150-க்கு (ஒரு கிலோ ₹61.50) சராசரி விலையாக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ₹6615க்கு (ஒரு கிலோ ₹66.15) வியாபாரிகளால் ஏலம் எடுக்கப்பட்டது. இந்த மறைமுக ஏலமானது ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை அன்று நடைபெற இருப்பதால் பருத்தி சாகுபடி செய்யும் விவசாயிகள் அனைவரும் காரைக்கால் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெறும் ஏலத்தில் பங்கு கொண்டு, தங்களது பருத்தியினை தரத்திற்கு ஏற்ப, சரியான எடைக்கு, போட்டி விலைக்கு விற்று அதிக லாபம் பெற்று பயனடையும் படி காரைக்கால் ஒழுங்குமுறை விற்பனை குழு செயலாளர் செந்தில்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
The post காரைக்கால் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் குவிண்டால் பருத்தி ₹7,450க்கு ஏலம் appeared first on Dinakaran.