- ரோகினி பாலிடெக்னிக் கல்லூரி
- Anjugram
- பால்குளம்
- ஜனாதிபதி
- நீலமார்த்தாண்டன்
- துணை ஜனாதிபதி
- நீல விஷ்ணு
- மேலாண்மை
- ப்ளஸ்ஸி ஜியோ
- தின மலர்
அஞ்சுகிராமம், ஜூலை 22: அஞ்சுகிராமம் அருகே பால்குளத்தில் உள்ள ரோகிணி பாலிடெக்னிக் கல்லூரியில் தொழில் வழிகாட்டுதல் மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி தலைவர் நீல மார்த்தாண்டன், துணைத் தலைவர் நீலவிஷ்ணு, நிர்வாக இயக்குனர் பிளஸ்ஸி ஜியோ, முதல்வர் ராஜேஷ், துணை முதல்வர் பேராசிரியர் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கருத்தரங்கில் கன்னியாகுமரி மாவட்ட இளநிலை அலுவலர் ராஜிகா,
இளம் தொழில் நெறியாளர் மற்றும் தொழிலாளர் நலத்துறை அலுவலர் சத்யா, மாவட்ட தொழில் மைய துணை இயக்குனர் செந்தமிழ் செல்வன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வேலைவாய்ப்பு மற்றும் சுய தொழில் தொடங்குவதற்கான வழிமுறைகள் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடினர். கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை ரோகிணி தொழில்நுட்ப கல்லூரி வேலைவாய்ப்பு அலுவலர் அபினேஷ் செய்திருந்தார். மின்னணுவியல் துறை விரிவுரையாளர் ரேணுகா தேவி நன்றி கூறினார்.
The post ரோகிணி பாலிடெக்னிக் கல்லூரியில் தொழில் வழிகாட்டுதல் கருத்தரங்கம் appeared first on Dinakaran.