×
Saravana Stores

பர்வதமலையில் பவுர்ணமியையொட்டி 4,560 அடி உயர மலை உச்சியில் விடியவிடிய பக்தர்கள் தரிசனம்

கலசப்பாக்கம்: திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த தென்மகாதேவமங்கலம் கிராமத்தில் தென்கயிலாயம் என அழைக்கப்படும் 4,560 அடி உயர பர்வத மலையில் பழமையான பிரம்மராம்பிகை சமேத மல்லிகார்ஜுனேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் மாதந்தோறும் பவுர்ணமி, அமாவாசை மற்றும் பிரதோஷ நாட்களில் விசேஷ பூஜைகள் நடப்பது வழக்கம். அதன்படி நேற்று ஆடி மாத பவுர்ணமியொட்டி நேற்று மாலை முதல் பக்தர்கள் விடிய விடிய மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.

இன்றும் விடுமுறை என்பதால் வழக்கத்தை விட அதிக அளவில் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். சனிக்கிழமை மலையேறி சென்று வழிபட்டால் மூன்று லோகங்களையும் வணங்கக்கூடிய நன்மை ஏற்படும் என்றும் ஞாயிறுக்கிழமையில் மலையேறி சென்று தரிசித்தால் கடன் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் அபிஷேக பொருட்களுடன் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். முன்னதாக மலையடிவாரத்தில் வீரபத்திரன் கோயிலில் பக்தர்களுக்கு கைகளில் சக்தி கயிறு கட்டப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது.

The post பர்வதமலையில் பவுர்ணமியையொட்டி 4,560 அடி உயர மலை உச்சியில் விடியவிடிய பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Parvadamalai ,Kalasappakkam ,Thiruvannamalai District ,Thenmagadevamangalam ,Brahmarambikai Sametha Mallikarjuneswarar ,Parvatha hill ,Thenkailayam ,Pradosha ,
× RELATED மொபட் மீது டிராக்டர் மோதி நிறைமாத...