- குத்துவிலாகு பூஜை
- திருக்குவேல தியாகராஜ சுவாமி கோவில்
- கிளிவேலூர்
- 208 குத்துவிளக்கு பூஜைகள்
- ஆதி
- திருக்குவெல தியாகராஜா சுவாமி கோயில்
- நாகை மாவட்டம்
- திருக்குவேல தியாகராஜா
- சுவாமி கோயில்
- 208 குத்துவிளக்கு பூஜை
- திருக்குவேல தியாகராஜ சுவாமி கோவில்
கீழ்வேளூர், ஜூலை 21: நாகை மாவட்டம் திருக்குவளை தியாகராஜ சுவாமி கோயிலில், முதல்முறையாக ஆடி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு 208 குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது.
நாகை மாவட்டம் திருக்குவளை தியாகராஜ சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயிலில், முதல்முறையாக ஆடி மாத முதல் வெள்ளியை முன்னிட்டு குத்துவிளக்கு பூஜை நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்றது. பெண்கள் குங்குமம் மற்றும் மலர் கொண்டு அர்ச்சனை செய்து சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர். தொடர்ந்து உலக அமைதிக்காவும், விவசாயம் செழிக்க வேண்டியும் சிறப்பு பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது. முன்னதாக முதல்முறையாக இக்கோயிலில் நடைபெறும் குத்து விளக்கு பூஜையை முன்னிட்டு, வண்டமரும் பூங்குழலாள் அம்பாளுக்கு சந்தன காப்பு சாத்தப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். குத்து விளக்கு பூஜை ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் கிராமவாசிகள் செய்து இருந்தனர்.
The post திருக்குவளை தியாகராஜ சுவாமி கோயிலில் 208 குத்துவிளக்கு பூஜை appeared first on Dinakaran.