- அம்மன்
- கே. பரமத்தி
- ஆடி
- ஒன்றிய அம்மன் கோவில்கள்
- கே
- Paramathi
- சாமி
- ஒன்றியம் குப்பம் ஊராட்சி உப்புபாளையம்
- வெள்ளத்தாரை
- வீரமாத்தியம்மன் கோவில்...
க.பரமத்தி, ஜூலை 21: க.பரமத்தி ஒன்றிய அம்மன் கோயில்களில் ஆடி மாத பௌர்ணமியையொட்டி நடந்த சிறப்பு அபிஷேகத்தில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
க.பரமத்தி ஒன்றியம் குப்பம் ஊராட்சி உப்புப்பாளையம் வெள்ளதாரை பகுதியில் வீரமாத்தியம்மன் கோயிலில் உள்ளது. இங்கு குடிகொண்டு உள்ள அம்மன் படைத்தல், காத்தல், அழித்தல், ஆகிய முத்தொழிலை செய்வது மட்டுமல்லாது இவளே தமோ குணத்தில் பகவதியாகவும், ரஜோ குணத்தில் துர்கையாகவும், சத்துவ குணத்தால் அம்பாளாகவும், 64 கலை வடிவங்களாகவும் 84 லட்சுமி யோனி பேதங்களாகவும் 64 கலை உபசார பூஜைக்கு உரியவளாக உள்ள இங்கு அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட முக்கிய விரத நாட்களில் வீரமாத்தியம்மனுக்கும், ஏழு கன்னிமார்களான அபிராமி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று வருகிறது.
நேற்று ஆடி மாத பௌர்ணமியையொட்டி பால், பன்னீர், சந்தனம், இளநீர், தேன், கரும்புச்சாறு போன்ற 18 வகை மூலிகை பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோல் குப்பம் காளியம்மன், க.பரமத்தி அஷ்ட நாகேஸ்வரி அம்மன் சித்தர் பீட கோயில், சூடாமணி மாசாணியம்மன், புன்னம் அங்காளம்மன், அத்திப்பாளையம் பொன்னாட்சியம்மன் ஆகிய கோயில்களில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
The post அம்மன் கோயில்களில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை appeared first on Dinakaran.