- நூல்
- தினம்
- செட்டிநாடு பொது சிபிஎஸ்இ பள்ளி
- காரைக்குடி
- புத்தகம் இல்லாத நாள்
- செட்டிநாடு பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளி
- உஷகுமாரி
- அருன் குமார்
- நிர்வாக இயக்குநர்கள்
- சாந்திகுமரேசன்
- பிரித்திஅருண்குமார்
- தின மலர்
காரைக்குடி, ஜூலை 21: காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளியில் புத்தகம் இல்லா நாள் விழா கொண்டாப்பட்டது. பள்ளி முதல்வர் உஷாகுமாரி வரவேற்றார். பள்ளி துணை சேர்மன் அருண்குமார், நிர்வாக இயக்குநர்கள் சாந்திகுமரேசன், ப்ரீத்திஅருண்குமார் ஆகியோர் வாழ்த்தினர். பள்ளி சேர்மன் எஸ்.பி.குமரேசன் தலைமை வகித்து பேசுகையில், பள்ளியை தாண்டி பிற வழிகளில் மாணவர்களிடம் திறன்களை வளர்க்க வேண்டும் என்பதற்காக இந்த புத்தகம் இல்லா நாள் கொண்டாப்படுகிறது. இதனை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் கீழடி அழைத்து செல்லப்பட்டு நமது பராம்பரிய கலாச்சாராம், பண்பாடு குறித்து தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது.
மதுரை திருமலைநாயக்கர் மகாலுக்கு மாணவர்கள் அழைத்து செல்லப்பட்டனர். தற்போது உள்ள சூழ்நிலையில் குழந்தைகள் மண்ணை தொட கூட நாம் அனுமதிப்பது இல்லை. வயலில் இறங்கி நடப்பது, சேற்றில் இறங்கி நடப்பது என்பது எல்லாம் வளரும் தலைமுறைக்கு தெரியாமலேயே போய் விடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்காக பாலாஜி கார்டனில் மாணவர்களுக்ெகன மண் குளியலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு அங்கு சேற்றில் மாணவர்கள் இறக்கி விடப்பட்டனர். செட்டிநாடு பள்ளியை பொருத்தவரை மாணவர்களிடம் உள்ள திறமைகளை வளர்ப்பதை இலக்காக கொண்டு செயல்படுகிறோம், என்றார். பள்ளி துணை முதல்வர் பிரேமசித்ரா நன்றி கூறினார்.
The post செட்டிநாடு பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளியில் புத்தகம் இல்லா நாள் விழா appeared first on Dinakaran.