×

காரமடையில் கோயில் முன்பு பொது குடிநீர் குழாய் இணைப்பு துண்டிப்பு கண்டித்து மக்கள் மறியல்

 

காரமடை, ஜூலை 21: காரமடை நகராட்சியில் 17-வது வார்டுக்கு உட்பட்ட கெண்டேசாமி நகர் பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சுமார் கடந்த 50 ஆண்டுகளாக சக்தி பிரசன்ன கணபதி கோயில் உள்ளது. இப்பகுதியை சேர்ந்த மக்கள் அன்றாடம் கோயிலில் வழிபட்டு வரும் நிலையில் கோயில் அருகே கடந்த 37 ஆண்டுகளாக நகராட்சியின் சார்பில் பொது குடிநீர் குழாய் பயன்பாட்டில் உள்ளது. இதனை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி நேற்று காலை நகராட்சி நிர்வாகம் குடிநீர் இணைப்பை துண்டித்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த பகுதி மக்கள் நேற்று சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தும் உரிய பதிலளிக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் திடீரென சாலை மறியல் மற்றும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காரமடை காவல் உதவி ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடமும் மற்றும் நகராட்சி நிரவாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து நகராட்சியில் சார்பில் உடனடியாக துண்டிக்கப்பட்ட குடிநீர் குழாய் இணைப்பு மீண்டும் தரப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

The post காரமடையில் கோயில் முன்பு பொது குடிநீர் குழாய் இணைப்பு துண்டிப்பு கண்டித்து மக்கள் மறியல் appeared first on Dinakaran.

Tags : Karamadai ,Kendesamy Nagar ,Ward 17 ,Karamadai Municipality ,Shakti Prasanna Ganapati ,Dinakaran ,
× RELATED காரமடை அருகே யானைகளை விரட்ட செயற்கை...