×

கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம் பாஜ மாநில செயலாளரிடம் சிபிசிஐடி விசாரணை

விழுப்புரம்: : கள்ளக்குறிச்சி விஷ சாராயம் சம்பவம் தொடர்பாக பாஜ மாநில செயலாளர் சூர்யாவிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் மெத்தனால் கலந்த விஷ சாராயம் அருந்தி 67 பேர் உயிரிழந்தனர். இது குறித்து சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிந்து குற்றவாளிகளை கைது செய்தனர்.

இந்நிலையில், பாஜ மாநில செயலாளர் எஸ்ஜி சூர்யா தனது எக்ஸ் தளத்தில் மெத்தனால் எங்கிருந்து வந்தது என்றும், புதுச்சேரி, தமிழக போலீசாரை தொடர்பு படுத்தியும் ஒரு கருத்தை பதிவிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் தமிழக காவல்துறை பற்றி அவதூறாக கருத்து கூறியிருந்தார். கள்ளக்குறிச்சி விஷசாராய வழக்கில் சிபிசிஐடி போலீசார் நேர்மையான கோணத்தில் விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்துள்ளனர் என்று பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதற்கு மாறாக பாஜ மாநில செயலாளர் சூர்யா கூறிய கருத்திற்கு நேரில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று சென்னையில் உள்ள அவரது வீட்டிற்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். அதன்படி நேற்று காலை விழுப்புரம் வண்டிமேட்டில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் பாஜ மாநில செயலாளர் சூர்யா ஆஜரானார். அவரிடம் ஏடிஎஸ்பி கோமதி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.
சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. மெத்தனால் எங்கிருந்து வந்தது போன்ற கருத்துக்களை பதிவிட்டுள்ளீர்கள்? குற்றவாளிக்கும் உங்களுக்கும் தொடர்பு இருக்கிறதா என்று பல்வேறு கேள்விகளை எழுப்பி சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.

The post கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம் பாஜ மாநில செயலாளரிடம் சிபிசிஐடி விசாரணை appeared first on Dinakaran.

Tags : CBCID ,BJP ,state secretary ,Villupuram ,Surya ,Kallakurichi ,Karunapuram, Kallakurichi district ,Dinakaran ,
× RELATED சூடுபிடிக்கும் சிபிசிஐடி விசாரணை;...