×

செல்வகணபதி எம்.பி., வாக்காளர்களுக்கு நன்றி

மேட்டூர், ஜூலை 21: நங்கவள்ளி பகுதியில், சேலம் செல்வகணபதி எம்.பி., வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். சேலம் நாடாளுமன்றத் தொகுதியில், திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மேற்கு மாவட்ட திமுக செயலாளர் செல்வகணபதி, நங்கவள்ளி ஒன்றியத்தில் சுற்றுப்பயணம் செய்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். வீரக்கல், குட்டப்பட்டி, கரட்டுப்பட்டி, சோரகை, நங்கவள்ளி பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். மேலும், மனுக்களை பெற்றுக்கொண்டு நன்றி தெரிவித்தார். நிகழ்ச்சியில் துணை செயலாளர் சம்பத்குமார், நங்கவள்ளி ஒன்றிய செயலாளர் அர்த்தநாரீஸ்வரர், மேச்சேரி ஒன்றிய செயலாளர் சீனிவாச பெருமாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

The post செல்வகணபதி எம்.பி., வாக்காளர்களுக்கு நன்றி appeared first on Dinakaran.

Tags : Selvaganapathy ,Mettur ,Nangavalli ,Salem ,West District ,DMK ,Nangavalli Union ,Dinakaran ,
× RELATED திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்