×
Saravana Stores

லீவுன்னாலே செயின் பறிப்பு ராணுவ வீரர் கைது

கும்பகோணம்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் முத்துப்பிள்ளை மண்டபத்தை சேர்ந்தவர் வசந்த்(26). ராணுவ வீரர். திரிபுராவில் வேலை செய்துள்ளார். இவரது நண்பர் சிவா(35). இருவரும் மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் பகுதியில் ஒரு பெண்ணிடம் செயின் பறித்தபோது கைதாகி மயிலாடுதுறை கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் இவர்கள் இருவரையும் நேற்று முன்தினம் காவலில் எடுத்த கும்பகோணம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் ராணுவ வீரரான வசந்த், விடுமுறைக்கு ஊருக்கு வரும்போதெல்லாம் நண்பருடன் சேர்ந்து தொடர்ந்து செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடமிருந்து 14 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரையும் போலீசார் மீண்டும் சிறையில் அடைத்தனர்.

The post லீவுன்னாலே செயின் பறிப்பு ராணுவ வீரர் கைது appeared first on Dinakaran.

Tags : Leeuwan ,Kumbakonam ,Vasanth ,Muthupillai Mandapam, ,Kumbakonam, Tanjore district ,Tripura ,Siva ,Guthalam ,Mayiladuthurai district ,Mayiladuthurai ,
× RELATED கும்பகோணம் சார்ங்கபாணிப் பெருமாள்