×
Saravana Stores

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ஹரிதரன் அதிமுகவில் இருந்து நீக்கம்

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான கவுன்சிலர் ஹரிதரன் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். அதிமுகவின் கொள்கைகள், குறிக்கோள்கள் மற்றும் கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்டதாகக் கூறி, ஹரிதரனை கட்சியில் இருந்து நீக்கி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

மேலும் வெளியான அறிக்கையில்; “கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும்; கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த, G. ஹரிதரன், (கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியக் குழு 3-வது வார்டு உறுப்பினர்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

The post பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ஹரிதரன் அதிமுகவில் இருந்து நீக்கம் appeared first on Dinakaran.

Tags : Bagujan Samaj Party ,Haridaran Atamugh ,Armstrong ,Chennai ,Councillor ,Haridaran Atamugav ,Aitmuga General Secretary ,Edapadi Palanisami ,Haridaran ,Supreme Court ,Bujan Samaj Party ,Haridaran Ajmukh ,Dinakaran ,
× RELATED ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய கைதிக்கு ஸ்டான்லியில் சிகிச்சை