பெங்களூரு: சினிமா டிக்கெட், OTT சந்தா கட்டணம் ஆகியவற்றில் 2% செஸ் வரி விதிக்க கர்நாடகா அரசு பரிசீலனை செய்து வருகிறது. கர்நாடகாவில் உள்ள சினிமா மற்றும் கலாச்சார கலைஞர்கள் பயன்பெறும் வகையில் செஸ் வரி விதிக்க கர்நாடகா முடிவு செய்துள்ளது. கர்நாடக சினிமா மற்றும் கலாச்சார ஆர்வலர்கள் மசோதா, 2024 ஜூலை 19-ல் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. 1 முதல் 2 சதவீதம் வரை செஸ் வரி இருக்கும்; மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்டணம் திருத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post சினிமா டிக்கெட்டுக்கு செஸ் வரி: கர்நாடகா அரசு பரிசீலனை appeared first on Dinakaran.