×
Saravana Stores

நாடு முழுவதும் நண்பகலுக்குள் விமான சேவை முழுவதும் சீரடைந்துவிடும்: விமான போக்குவரத்து அமைச்சகம் விளக்கம்

டெல்லி: நாடு முழுவதும் நண்பகலுக்குள் விமான சேவை முழுவதும் சீரடைந்துவிடும் என விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. மைக்ரோசாஃப்ட் மென்பொருள் கோளாறு காரணமாக விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் தற்போது படிப்படியாக விமான சேவை சீராகி வருவதாக ஒன்றிய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

Crowd Strike-ன் இணைய பாதுகாப்பு கோளாறால் மைக்ரோசாஃப்ட் சேவையில் நேற்று (ஜூலை19) உலகம் முழுவதும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் 1,400 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. 3,000க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதியடந்தனர்.

இந்த நிலையில் மைக்ரோசாஃப்ட் பிரச்னைக்கு தீர்வு காண CrowdStrike மற்றும் தொழில்துறையினர் தீவிரமாக பணியாற்றி வருவதாகவும், வாடிக்கையாளர்களின் கணினிகள் பாதுகாப்பாக மீண்டும் செயல்பட வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மைக்ரோசாஃப்ட் சி.இ.ஓ. சத்யநாதெல்லா தெரிவித்தார்.

இதனையடுத்து இந்தியாவில் இன்று அதிகாலை முதல் விமானப் சேவை படிப்படியாக சீராகி வருவதாக விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் நண்பகலுக்குள் விமான சேவை முழுவதும் சீரடைந்துவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post நாடு முழுவதும் நண்பகலுக்குள் விமான சேவை முழுவதும் சீரடைந்துவிடும்: விமான போக்குவரத்து அமைச்சகம் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Civil Aviation Ministry ,New Delhi ,Ministry of Civil Aviation ,Union Airlines ,Microsoft ,
× RELATED புகை மண்டலமானது டெல்லியில் காற்று...