×

சித்தோடு அருகே தேசிய நெடுஞ்சாலை பணியின் போது குடிநீர் குழாய் உடைப்பு

 

பவானி, ஜூலை20: பவானியை அடுத்த கோணவாய்க்கால் பிரிவு அருகே காவிரி ஆற்றிலிருந்து நீரேற்றம் செய்யப்பட்டு பெருந்துறை சிப்காட் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு ராட்சத குழாய் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. சேலம் – கோவை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் இக்குழாய் பதிக்கப்பட்டுள்ள நிலையில், சித்தோட்டை அடுத்த புறவழிச்சாலையில் ராட்சத இயந்திரங்களைக் கொண்டு விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில், நேற்று தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டபோது சிப்காட் தொழிற்பேட்டைக்கு செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால், குழாய் வழியாக பொங்கி வெளியேறி பாய்ந்து சென்றது. இதனால், பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணானது. இதையடுத்து, நீரேற்று நிலையத்தில் தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, உடைப்பு ஏற்பட்ட பகுதியை சீரமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

 

The post சித்தோடு அருகே தேசிய நெடுஞ்சாலை பணியின் போது குடிநீர் குழாய் உடைப்பு appeared first on Dinakaran.

Tags : National Highway ,Chithod ,Bhavani ,Cauvery river ,Konavaikal ,Perundurai Chipgad ,Salem-Coimbatore National Highway ,Highway ,Dinakaran ,
× RELATED எச்சரிக்கை பலகை, தடுப்புகள் இல்லாமல்...