திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த சில வாரங்களாக டெங்கு, எலிக்காய்ச்சல், வெஸ்ட் நைல் காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் உட்பட நோய்கள் பரவி வருகின்றன. சுகாதாரத் துறை சார்பில் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் நோய் பரவல் குறையவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன் மலப்புரம் மாவட்டம் பொன்னானியை சேர்ந்த சைபுன்னிசா(47) என்ற பெண் பன்றிக் காய்ச்சல் பாதித்து திருச்சூரிலுள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
சிகிச்சை பலனின்றி அவர் கடந்த இரு தினங்களுக்கு முன் மரணமடைந்தார். இந்தநிலையில் எர்ணாகுளம் அருகே உள்ள லியோன் என்ற (4) வயது சிறுவன் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு நேற்று காலை உயிரிழந்தான். இதையடுத்து கேரளாவில் கடந்த 3 நாள்களில் பன்றிக் காய்ச்சலுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 2ஆக உயர்ந்துள்ளது.
The post கேரளாவில் பன்றிக்காய்ச்சல் பரவுகிறது appeared first on Dinakaran.