கொள்ளேகால்: காவிரி நதியில் அதிகப்படியான தண்ணீர் விடப்பட்டுள்ளதால் நதிக்கரையோரம் வசிக்கம் மக்களுக்கு வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே பாதிக்கப்படும் கிராமங்களில் துணை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருவதால் அணைகள் வேகமாக நிரம்பி வரும் நிலையில் கபினி பெரும்பாலும் நிரம்பியுள்ளது. இதன் காரணமாக கபினி அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அதிகப்படியான தண்ணீர் திறந்துவிபட்டுள்ளதால் கொள்ளேகால் தாலுகாவில் உள்ள நதிக்கரையோம் உள்ள கிராமங்களில் வெள்ள பாதிப்பு அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இப்போது காவிரி நதியில் அதிகபடியான தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் நதிக்ரையோரம் மக்கள் வசிக்கும் கிராமங்களில் வெள்ள பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. பாதிக்கப்படும் கிராமங்களில் துணை கலெக்டர் கீதா உடேத் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
The post மழை வெள்ளம் பாதிப்பு கிராமங்களில் துணை கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.